ரூ. 70 லட்சம் கடன்.. ரூ. 1.23 கோடிக்கு சொத்து.. இதுதாங்க தீபா!
ஆர்கே நகர் தொகுதி வேட்பாளரளாக மனுதாக்கல் செய்துள்ள தீபா தன் சொத்து மதிப்பு ரூ.1,23,46,604 என்றும், 70 லட்சத்து 65ஆயிரம் ரூபாய்க்கு கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: ஆர்கே நகர் தொகுதி வேட்பாளராக மனுதாக்கல் செய்துள்ள எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் தீபா தன் சொத்து மதிப்பு ரூ.1,23,46,604 என்றும், கணவர் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 70 லட்சத்து 65ஆயிரம் ரூபாய்க்கு கடன் இருப்பதாகவும் அவர் தாக்கல் செய்துள்ள பிராமண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அசையும் சொத்துகள்:
•தீபா கையிலுள்ள ரொக்கம் - ரூ.3.50,000
•ஆந்திரா வங்கி , அடையாறு - ரூ.947
•பாரத ஸ்டேட் வங்கி, பாண்டிபஜார் - ரூ.1,77,367 பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தீபா கூறியுள்ளார்.

கடன்:
•ராஜா என்பவரிடம் ரூ.40,00,000
•சுரேஷ் என்பவரிடம் ரூ.20,00,000
•தினேஷ் என்பவரிடம் ரூ.10,65,000
•மொத்தக் கடன் ரூ.70,65,000 உள்ளதாகவும் தீபா குறிப்பிட்டுள்ளார்.

நகைகள், வாகனங்கள்
தன்னிடம் தங்க நகைகள் - 821 கிராம் உள்ளதாகவும் அவற்றின் மதிப்பு ரூ.23,80,900 என்று குறிப்பிட்டுள்ளார். வெள்ளிப்பொருட்கள் 1கிலோ இருப்பதாகவும் அவற்றின் மதிப்பு ரூ.1,72,000 என்றும் கூறியுள்ளார். 20 கேரட் வைரம் மதிப்பு ரூ.4,00,000 என்றும் தீபா கூறியுள்ளார். 2016ம் ஆண்டு வாங்கிய ஹோண்டா ஆக்டிவா உள்ளது அவற்றின் மதிப்பு ரூ.50,390 என்று குறிப்பிட்டுள்ளார்.

அசையா சொத்து
•1600 சதுர அடி நிலத்தில் 3200 சதுர அடியில் கட்டப்பட்ட வீடு. வாங்கப்பட்ட ஆண்டு 9-11-2006 வாங்கப்பட்ட போது மதிப்பு : ரூ.17,50,000 தற்போதைய தோராய மதிப்பு : ரூ.2,00,00,000
மொத்தத்தில் தனது அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.1,23,46,604 என்று வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

கணவர் பெயர் இல்லை
ஜெ.தீபா தன்னை ஜெ.ஜெயகுமாரின் மகள் என்றே குறிப்பிட்டுள்ளார். திருமணமான தீபா மனுவில் தனது கணவரின் பெயரை குறிப்பிடவேயில்லை. குடும்ப உறுப்பினர்கள் பட்டியலில் தீபா தனது பெயரை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். அவரது வீட்டில் இருந்து சமீபத்தில் வெளியேறிய மாதவன் பெயரை எங்குமே குறிப்பிடவில்லை. இவரது வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications