வீட்டுல சுட்ட பணம் எங்கப்பு? கொடுத்துட்டு அப்புறம் பேசலாம்... மாதவனுக்கு தீபா கண்டிஷன்
வீட்டில் இருந்து ஆட்டைய போட்ட பணத்தை திருப்பி முதலில் கொடுக்கட்டும்... அப்புறம் ஆர்கே நகர் பிரசாரத்தைப் பார்க்கலாம் என கணவர் மாதவனை மிரட்டியுள்ளாராம் தீபா.
சென்னை: தமது வீட்டில் இருந்து சுருட்டிக் கொண்டு போன பணத்தை முதலில் கொடுத்துவிட்டு அப்புறம் ஆர்கே நகர் தேர்தல் பிரசாரம் பற்றி பேசலாம் என ஒரே போடு போட்டுவிட்டாராம் தீபா.
ஆர்கே நகர் இடைத் தேர்தலில் திமுக, அதிமுக கோஷ்டிகள், பாஜக என பெரும் கட்சிகள் ஆராவாரத்துடன் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அலட்டிக் கொள்ளாமல் படகு சின்னத்துக்கு வாக்கு கேட்டு வருகிறார் தீபா.

படாதபாடு
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் வேட்பாளராக தீபா போட்டியிடுகிறார். சுயேட்சைகள் கணக்கில்தான் தீபா சேர்க்கப்பட்டுள்ளதால் வேட்பாளர்கள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

மாதவன் தீபா
தீபா இங்கே ஆர்கே நகரில் பிரசாரம் செய்து கொண்டிருக்க அவரது கணவர் 'மாதவன் தீபாவோ' தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார். தீபாவை முதல்வராக்க கட்சி தொடங்குவதற்காக சிறப்பு ஆலோசனைகளை நடத்தி வருகிறராம் மாதவன்.

ஆளில்லா டீ கடைகள்
பெரிய பெரிய மண்டபங்களை வாடகைக்குப் பிடித்து ஆயிரக்கணக்கில் நாற்காலிகளை போட்டு அமர்க்களமாக நடைபெறுகிறது மாதவனின் ஆலோசனை கூட்டம். ஆனால் என்ன கூட்டத்தில் முன்வரிசையில் 10 பேர் மட்டுமே இருக்க ஆளே இல்லாத டீ கடையில் டீ ஆற்றுகிறார் மாதவன் எனும் நிலைமைதான்.

நிபந்தனை இதுதான்
இதனிடையே ஆர்கே நகரில் தீபாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறேன் என தூது விட்டுப் பார்த்திருக்கிறார் மாதவன். ஆனால் தீபாவோ, முதலில் வீட்டில் இருந்து சுருட்டிக் கொண்டு போன பல கோடி ரூபாய் பணத்தை திரும்ப ஒப்படைக்கட்டும்..அப்புறம் பிரசாரத்தை பற்றி பேசலாம் என அனல் கக்கினாராம்.
சுருட்டிக் கொண்டு போன பணத்தையெல்லாம் அள்ளி இறைச்சாச்சே..எங்க திருப்பி தருவது? என திருதிருவென விழிக்கிறாராம் மாதவன். அதே ஆர்கே நகர் தேர்தல் களத்துக்குப் போனால் இன்னும் கொஞ்சம் பணம் அறுவடை செய்துவிடலாமே என்ற உள்கணக்கோடும் தீவிர ஆலோசனையில் இருக்கிறாராம் 'மேடி'
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications