தீபா எம்எல்ஏ ஆய்ருவாராம்.. அப்படியே முதல்வரும் ஆய்டுவாராம்.. இது "மேடி" நம்பிக்கை!
ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் தீபாவுக்கு ஆதரவாக அவரது கணவர் மாதவன் இன்று முதல் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தீபாவை ஆதரித்து அவரது கணவர் மாதவன் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கவுள்ளார். எம்எல்ஏ ஆனதும் அனைத்து அதிமுக எம்எல்ஏ-க்களின் ஆதரவுடன் தீபா முதல்வராவார் என்று மாதவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கிய நிலையில் அனைத்து வேட்பாளர்களும் படு பிஸியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் தீபாவின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டு அவருக்கு படகு சின்னம் ஒதுக்கப்பட்டது.

தெரியாமல் விட்டுவிட்டார்
பேரவை தொடங்கிய காலத்திலிருந்தே தீபாவுக்கும், மாதவனுக்கும் கருத்து வேறுபாடு என்று கூறப்பட்ட நிலையில், வேட்புமனுவில் கணவரது பெயரை தீபா குறிப்பிடாமல் விட்டுவிட்டார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது பதற்றத்தில் தனது பெயரை குறிப்பிடாமல் தீபா மறந்து விட்டார் என்று மாதவன் சப்பைக் கட்டு கட்டினார்.

பிரசாரம் தொடங்கினார்
இதைத் தொடர்ந்து தீபா ஆர்.கே.நகரில் தனது பிரசாரத்தை தொடங்கினார். அப்போது பிரச்சாரத்துக்கு நீங்களும் செல்வீர்களா என்று மாதவனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது தீபா அழைத்தால் செல்வேன் என்று கூறினார்.

இன்று முதல் பிரசாரம்
இந்த நிலையில் தீபாவுக்கு ஆதரவாக இன்று பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக மாதவன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வெறுவார். அதன் பிறகு தமிழகத்தில் உள்ள எம்எல்ஏ-க்கள் தீபாவின் பக்கம் வருவர். பின்னர் அனைவரின் ஆதரவுடன் தீபா முதல்வராவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

விரைவில் கட்சியின் பெயர் அறிவிப்பு
நான் புதிதாக தொடங்கவுள்ள கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும். மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம். அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் கொள்கைகளை எனது கட்சியும் பின்பற்றும். சசிகலா தலைமையை ஏற்காத அதிமுக தொண்டர்களை எங்கள் கட்சியில் இணைப்போம். நான் பணத்துக்காக யாரிடமும் விலை போக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications