நெருங்கும் தீபாவளி.. அதிகாரிகள் சோதனை - விதிமீறி இயங்கிய பட்டாசு கடைகளுக்கு சீல்
சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் விதி மீறி இயங்கி வந்த பட்டாசுகடைகளுக்கு அதிகாரிகளுக்கு சீல் வைத்தனர்.
சாத்தூர்: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அதிகாரிகள் திடீர் சுறுசுறுப்புடன் பட்டாசு கடைகளை சோதனையிட தொடங்கியுள்ளனர். இதனால் வியாபாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
தீபாவளி என்றாலே பட்டாசுதான். பட்டாசு ஆலைகள் நிறைந்த நகரம் சிவகாசி. அங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் சிவகாசி, சாத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.

சிவகாசியில் விதிகளை மீறி பட்டாசு கடைகள் செயல்படுவதாக வந்த புகாரினை தொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரி முத்துக்குமரன், சிவகாசி தாசில்தார் ஸ்ரீதரன் ஆகியோரது தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தெற்கு ரதவீதியில் உள்ள ஒரு கடையிலும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள ஒரு கடையிலும் விபத்துகால அவசர வழியில்லாதது தெரியவந்தது.
இதையடுத்து அந்த 2 கடைகளுக்கும் உடனடியாக சீல் வைக்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்பட்டது. இந்த சோதனை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விதிமுறைகளை வியாபாரிகள் பின்பற்ற வேண்டும் என்றும் இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications