இயக்குனர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கு: கோர்ட்டில் ஆஜராகாத நடிகை அஞ்சலிக்கு பிடிவாரண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத நடிகை அஞ்சலிக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் களஞ்சியம் தன்னை கொடுமைபடுத்தியதாக நடிகை அஞ்சலி பரபரப்பு புகார் தெரிவித்தார். இதையடுத்து அவர் தலைமறைவாகி பின்னர் ஹைதராபாத்தில் உள்ள காவல் நிலையத்தில் அவராகவே ஆஜர் ஆனார். இதற்கிடையே அஞ்சலியின் குற்றச்சாட்டை மறுத்த இயக்குனர் களஞ்சியம் அவர் மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

Defamation case: Arrest warrant issued against actress Anjali

இந்த வழக்கு பல முறை விசாரணைக்கு வந்துள்ளது. ஆனால் அஞ்சலி மட்டும் இதுவரை ஆஜராகவே இல்லை. இந்நிலைில் அக்டோபர் 25ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அஞ்சலிக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி கடந்த 12ம் தேதி உத்தரவிட்டார். இத்தனை நாட்களாக ஆஜராகாத அஞ்சலி இன்று வருவார் என்று கூறப்பட்டது.

இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் கூடிவிட்டனர். இன்றைய வழக்கு விசாரணையின்போது இயக்குனர் களஞ்சியம் மட்டுமே ஆஜரானார். அஞ்சலி ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர் மேகநாதன் ஆஜராகி அஞ்சலிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரால் நீதிமன்றத்திற்கு வர முடியவில்லை என்று தெரிவித்தார்.

இதை கேட்ட நீதிபதி ராஜலட்சுமி அஞ்சலிக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை நம்பர் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

ஆந்திராவில் தங்கி தெலுங்கு படங்களில் நடித்து வரும் அஞ்சலி விரைவில் சரண் அடைந்து பிடிவாரண்ட்டை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+