பொதுக்கூட்டங்களில் அவதூறாகப் பேசியதாக வைகோ, பிரேமலதா மீது வழக்குப் பதிவு
திருப்பூர்: தேர்தல் பொதுக்கூட்டத்தில் அவதூறாகப் பேசியதாக அதிமுகவினர் அளித்த புகாரின்பேரில் தேமுதிக மகளிரணித் தலைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் மீது திருப்பூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறிகையில், திருப்பூர், யூனியன் மில் சாலையில் தேமுதிக சார்பில் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் கடந்த 1-ஆம் தேதி நடைபெற்றது. இதில், தேமுதிக மகளிரணித் தலைவி பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் அறிக்கை குறித்து விளக்கிப் பேசினார்.

மேலும், இக்கூட்டத்தில் திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் தங்கவேல், தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், அந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் குறித்து அவதூறாகவும், மக்களிடம் விரோதத்தை வளர்க்கும் வகையிலும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தூண்டுதலின்பேரில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாகக் கூறி, திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வடக்குக் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் வைகோ ஆகிய இருவர் மீதும் இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications