அவதூறு வழக்கு: அரியலூர் கோர்ட்டில் காடுவெட்டி குரு ஆஜர்
அரியலூர்: தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் வன்னியர் சங்க தலைவர் குரு அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் அப்போது குருவிற்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
அரியலூரில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில் மாநில வன்னியர் சங்க தலைவரும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குரு கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, தமிழக முதல்வரை அவதூறாகவும், அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பொதுக்கூட்டத்தில் காடுவெட்டி குரு பேசியதாக அரியலூர் அரசு வழக்கறிஞர் சண்முகம் அரியலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கின் விசாரணை அரியலூர் நீதிமன்றத்தில் இன்று வந்தது. அப்போது, நீதிமன்றத்தில் ஆஜரான காடுவெட்டி குருவிடம் விசாரணை செய்த மாவட்ட நீதிபதி கிருஷ்ணவள்ளி, வழக்கு விசாரணையை வரும் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும் இவ்வழக்கு சம்பந்தமான குற்றப்பத்திரிகையை குருவிடம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, காடுவெட்டி குருவுக்கு குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டது.
காடுவெட்டி குரு நீதிமன்றத்தில் ஆஜரானதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications