ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து பிரேமலதாவுக்கு விலக்கு

தேமுதிக மகளிர் அணி சார்பில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாடம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ஒரு பெண் ஆட்சி செய்யும் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை அதிகமாக நடக்கிறது. இதற்கு எல்லாம் காரணம் டாஸ்மாக் கடைகள் தான் என்றார்.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாகக் கூறி பிரேமலதா மீது சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வரும் 21ம் தேதி பிரேமலதா நேரில் ஆஜராக உத்தரவிட்டு அவருக்கு சம்மன் அனுப்பி வைத்தது. இதை எதிர்த்து பிரேமலதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனு நீதிபதிகள் மதிவாணன், வாசுகி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிரேமலதா அவதூறு வழக்கில் மாவட்ட அமர்வு நீதிமன்றம் முன்பு ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications