அவதூறு வழக்கில் ஆஜராக ஸ்டாலினுக்கு சம்மன்: திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

Subscribe to Oneindia Tamil

Stalin
சென்னை: அவதூறு வழக்கில், நவம்பர் 25ஆம் தேதி திண்டுக்கல் நீதிமன்றத்தில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆஜராக வேண்டும் என, சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 6ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட திமுக சார்பில், தேர்தல் நிதியளிப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மு.க. ஸ்டாலின் தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலும், மக்கள் மத்தியில் அரசுக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் எண்ணத்திலும், பேசியதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து மு.க.ஸ்டாலின் மீது வழக்குத் தொடுக்க திண்டுக்கல் நீதிமன்ற அரசு வக்கீல் ஏ. ஆரோக்கியம், தமிழக அரசிடம் அனுமதி கேட்டிருந்தார்.

அதன்படி, அரசிடமிருந்து கடந்த 11ஆம் தேதி அனுமதி கிடைத்ததன்பேரில், உடனடியாக மு.க. ஸ்டாலின் மீது, திண்டுக்கல் முதன்மை நீதிமன்றத்தில் ஏ. ஆரோக்கியம் மனு தாக்கல் செய்தார்.

வழக்கின் விவரங்களைப் பதிவு செய்த நீதிமன்றம், அக்டோபர் 21ஆம் தேதி விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

இந்த வழக்கில், நவம்பர் 25ஆம் தேதி மு.க. ஸ்டாலின் நேரில் ஆஜராகி, பதிலளிக்க வேண்டும் என, முதன்மை நீதிபதி வி. பாலசுந்தரகுமார் உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+