உச்சநீதிமன்றம் குட்டு வைத்தும் தொடரும் "அவதூறு" வழக்குகள்.... விஜயகாந்த் மீது ஜெ. புது வழக்கு
சென்னை: சென்னையைப் புரட்டிப் போட்ட பெருமழை வெள்ளம் தொடர்பாக விமர்சித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், முரசொலி நாளேடு, ஜூனியர் விகடன் குழும இதழ்கள் ஆகியவற்றின் மீது முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் சார்பில் ஏராளமான அவதூறு வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த அவதூறு வழக்குகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஜயகாந்த் வழக்கும் தொடர்ந்துள்ளார்.

இவ்வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் கண்டனமும் தெரிவித்திருந்தது. "தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அவதூறு வழக்குகள் அதிகமாக தொடரப்படுகின்றன? அரசுக்கு எதிராக விமர்சனம் செய்வதுதான் எதிர்கட்சிகள் பணி; இப்படி விமர்சனம் செய்வதற்கு எல்லாம் அவதூறு வழக்குகள் தொடர்வதா? அரசு எந்திரம் சரியாக இயங்காததாலேயே விமர்சனங்கள் எழுகின்றன என கடுமையாக நீதிபதிகள் கூறியிருந்தனர்.
அத்துடன் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு விசாரணைகளுக்கும் உச்சநீதிமன்றம் தடையை நீட்டித்திருந்தது. இந்நிலையில் சென்னை வெள்ளம் தொடர்பாக விமர்சனம் செய்த விஜயகாந்த் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கை முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்துள்ளார்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் ஜெகன் இன்று இவ்வழக்கைத் தாக்கல் செய்தார்.
முரசொலி மீதும் வழக்கு
இதேபோல் அமைச்சர் உதயகுமார் சார்பில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி மீதும் சென்னை வெள்ளம் குறித்து அவதூறான செய்தி வெளியிட்டதாக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.,
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications