பேயாட்டம் போட வரும் காயத்ரி அண்ணியார்.... ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணியார் காயத்ரியின் மரணத்தோடு தெய்வமகள் சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என்று நினைத்தால் அது தப்புங்க.. இனிதான் பயங்கர டுவிட்ஸ் எல்லாம் இருக்கு என்று சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார் இயக்குநர் குமரன்.

அண்ணியார் உயிரோடு இருக்காங்களா? எப்போ வருவாங்க என்று கேட்டு விட்டு அவரின் அடிவிழுதுகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

காயத்ரி இறந்து போயிட்டாங்களா? இனி திரும்ப வரவே மாட்டாங்களா? என்று கேட்டு ஆளுக்கு ஆள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இனிதான் எதிர்பாராத டுவிஸ்ட்டே இருக்கு என்று கூறுகின்றனர் தெய்வமகள் குழுவினர்.

வாவ் வாட் எ போல்ட் லேடி

பில்லா அஜீத் நயன்தாரா படத்தை போட்டு பிரகாஷ், காயத்ரியின் துப்பாக்கி காட்சிகளை பதிவிட்டுள்ளனர் அவரது ரசிகர்கள்.

பாகுபலியையும் விடலையே

காயத்ரியை பிரகாஷ் கொலை செய்த காட்சியை பாகுபலி படத்தின் காட்சியோடு ஒப்பிட்டு பதிவிட்டுள்ளனர்.

செத்த பிறகும் வளர்க்கிறாங்க

கரப்பான் பூச்சி தலையை வெட்டினாலும் உயிர்வாழ்வது போல., தெய்வமகள் அண்ணியார் செத்தாலும் சீரியலை வளர்க்கிறாங்க

எதுக்கு ஓட்டுறானுங்க

அண்ணியாரே செத்து போச்சு, இன்னும் எதுக்கு சீரியல் ஒளிபரப்பணும் என்று கேட்டுள்ளனர் அவரது ரசிகர்கள்.

காயத்ரி திரும்ப வருவா

காயத்ரி திரும்ப வருவா

நிறைவேறாத ஆசையோடு செத்துப்போன காயத்ரி ஆவியாக திரும்ப வருவாள் என்றும், இனிதான் ஜெய்ஹிந்த் வீட்டு குடும்பத்தினருக்கு பேயாட்டம் காத்திருக்கிறது என்றும் சமூகவலைத்தளங்களில் கதை சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

சத்யாவின் குழந்தை

சத்யாவின் குழந்தை

சத்யாவிற்கு பிறக்கப் போகும் குழந்தைதான் நிஜ தெய்வமகள் என்றும் காயத்ரிக்கு பதிலடி தரப்போவது அந்த குழந்தைதான் என்றும் கூறி வருகின்றனர். இவர்கள் சொல்கிற கதையை பார்த்தால் இன்னும் 500 எபிசோடுகள் இழுப்பார்கள் போலிருக்கேப்பா.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Deivamagal serial will continue after Gayathri death. Gayathri, the eldest daughter-in-law of Jaihind Vilas, wants to amass the family's wealth. Gayathri will be back ghost team said.
Please Wait while comments are loading...