கர்ப்பிணியை காரில் போட்டு கொல்ல எப்படி மனசு வரும்?... காயத்ரியை சபிக்கும் பெண்கள்
தெய்வமகள் சீரியலின் டிஆர்பி கடந்த சில தினங்களாக எகிறி வருகிறது எல்லாம் காயத்ரியால்தான்.
சென்னை: தெய்வமகள் சீரியலில் கர்ப்பிணி சத்யாவை கார் டிக்கியில் போட்டு அடைத்து கொல்லத்துடிக்கும் காயத்திரியை இல்லத்தரசிகள் சாபம் விட்டு வருகின்றனர். தெய்வமகள் சீரியலின் கடந்த சில எபிசோடுகள் டிஆர்பி ரேட்டிங்கில் எகிறி வருகிறது.
ஜெய்ஹிந்த் விலாஸ் வீட்டு மூத்த மருமகள் காயத்ரி, தான் போட்ட சபதத்தில் தோற்றுப் போக உச்சபட்ச கோபத்தில் சத்யாவை கொல்ல நினைக்கிறாள். சத்யா செத்துப்போனால் பிரகாஷை எளிதாக தோற்கடித்து விடலாம் என்பது எண்ணம்.

சத்யா கடத்தல்
கர்ப்பிணியாக இருக்கும் சத்யாவை கடத்தி காட்டிற்குள் கொண்டு வந்து மிரட்டுகிறாள் காயத்ரி. தனது கொலை திட்டத்திற்கு உதவியாக தனது அலுவலக எம்டியை உதவியை தேடுகிறாள். லேப்டாப், நெட் சகிதமாக கொலையை லைவ் ஆக ஒளிபரப்புவதுதான் காயத்ரியின் திட்டம்.

வில்லியின் கொடூரம்
சினிமாவை விட சீரியர்களில் இப்போது வில்லிகளின் திட்டம் படு பயங்கரமாக இருக்கிறது. சத்யாவை கர்ப்பிணி என்றும் பார்க்காத காயத்ரி வாயை கட்டி கார் டிக்கியில் போட்டு அடைத்து வைக்கிறாள். அதில் கேமராவையும் பொறுத்தி லைவ் செய்கிறாள்.

சினிமாவில் சுட்டதுதான்
இந்த சீன் என்னவோ நாய்கள் ஜாக்கிரதை படத்தில் இருந்து சுட்டதுதான். அதில் கர்ப்பிணி பெண்ணை சவப்பெட்டியில் போட்டு குழி தோண்டி புதைத்து தேட விடுவார்கள். இதில் காருக்குள் போட்டு அடைத்து வைத்து சுத்துகின்றனர்.
இந்த சீன் என்னவோ நாய்கள் ஜாக்கிரதை படத்தில் இருந்து சுட்டதுதான். அதில் கர்ப்பிணி பெண்ணை சவப்பெட்டியில் போட்டு குழி தோண்டி புதைத்து தேட விடுவார்கள். இதில் காருக்குள் போட்டு அடைத்து வைத்து சுத்துகின்றனர்.

தேடி அலையும் பிரகாஷ்
கர்ப்பிணி மனைவியை காணாமல் தேடி அலையும் பிரகாஷ்க்கு சத்யாவின் நிலை தெரியவர அழுது கொண்டே தேடுகிறான். கூடவே போலீஸ் சுற்றி சுற்றி வருகிறது. பேசாமல் பிரகாஷ் போலீஸ் வேலைக்கு போகலாம் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

நல்ல சாவு வருமா?
சத்யாவின் நிலையைப் பார்த்து அனைவருமே கதற.... சீரியல் பார்க்கும் இல்லத்தரசிகளே காயத்ரியை சபிக்கின்றனர். இவளுக்கு நல்ல சாவு வருமா என்று கேட்க, டிவி பார்க்கும் கணவர்கள் பரிதாபமாக பசியோடு சீரியல் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

மாறிய திட்டம்
காயத்ரிக்கு உதவி செய்வது எம்டிதான் என்று பிரகாஷ் கண்டுபிடிக்க, அங்கே போய் கார் எங்கேயிருக்கிறது என்று கண்டுபிடிக்க திட்டத்தை மாற்றி விடுகிறார் காயத்ரி. இப்போது கார் கணேசனின் கையில் இருக்கிறது.

இன்னும் எத்தனை நாளைக்கு?
நான்கு மணி நேரத்தில் சத்யாவின் உயிர் போய் விடும் என்று காயத்ரி சொல்லி 4 நாட்களாகி விட்டது. இந்த சீனை வைத்தே நான்கு எபிசோடுகள் ஓட்டி விட்டனர். இன்னும் எத்தனை எபிசோடுகள் சத்யாவை வைத்து ஓட்டுவார்களோ?

முடிவுக்கு வருகிறதா?
இது எனக்கு வாழ்வா? சாவா பிரச்சினை என்றும் தோற்று விட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் காயத்ரி கூறியிருக்கிறாள். சீரியல் 1223 எபிசோடுகளை கடந்து விட்டது. யுடுயூப்பில் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் கடந்த சில நாட்களாக பார்த்து வருகின்றனர். சத்யாவிற்கு என்னவாகுமோ என்ற பதைபதைப்புதான் எல்லாருக்குமே. சீரியலை முடிக்கப் போறாங்களா என்று சோகத்தோடு கேட்கின்றனர் இல்லத்தரசிகள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications