சன்டிவியின் நட்சத்திர கபடி... கலந்து கட்டி அடித்த தெய்வமகள் காயத்ரி டீம்
சன்டிவியில் நட்சத்திர கபடி நிகழ்ச்சியில் காயத்திரி அண்ணியாரின் டீம் எதிரணியை கலந்து கட்டி அடித்தது.
சென்னை: ஞாயிறு மதியம் வந்தாலே சன்டிவியின் டிஆர்பி எகிறுகிறது. காரணம் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கபடிதான்.
இந்தவாரம் தெய்வமகள், கேளடி கண்மணி அணியினர் பங்கேற்றனர். காயத்ரி அண்ணியார்தான் தெய்வமகள் அணியின் கேப்டன்.
சும்மா அசால்டாக எதிரணியை துவம்சம் செய்தனர். பாயிண்ட்களை அள்ளினர். எதிரணியோ பாவம் நண்டும் சிண்டுமாக பொசுக் பொசுக்கென்று அவுட் ஆகி போனார்கள்.

சின்னப்புள்ளைதனமா இருக்கே
சண்டையில கிழியாத சட்டை எங்கேயிருக்கு? கபடின்னு வந்துட்டா அடி விழாம இருக்குமா? ஆனால் தெய்வமகள் அஞ்சலி அநியாயத்திற்கு அழுது சீன் போட்டார்.

நகத்தினால் கீறல்
கேளடி கண்மணி அணியினர் அதிகம் அட்டாக் செய்தது குட்டிப்பெண் அஞ்சலியைத்தான். வயிற்றில் அடிக்கிறார்கள். நகத்தில் கீறுகிறார்கள் என்று ஒவ்வொருமுறையும் புகார் சொல்லிக்கொண்டேயிருந்தார். ஓவர் சீனு ஒடம்புக்கு ஆகாது மக்களே!

அழாத கண்ணு
கேளடி கண்மணி அணியின் கேப்டனோ, அடிக்கடி மூர்ச்சையானார். ஆனால் தம் கட்டி கபடி ஆடினார். எங்களைப் பார்த்து அவங்க பயந்துட்டாங்க என்று தெய்வமகள் அணியைப் பார்த்து சொன்னார்.

காயத்ரிக்கு பயமா?
நாங்க பயந்தா எங்களுக்கு பாயிண்ட் வருமா? நாங்கதான் ஜெயிச்சோம். காயத்ரிக்கு பயமே கிடையாது. நாங்கதான் வின்னர் என்று கூறி அந்த அணி உற்சாக குரல் எழுப்பியது.

சண்டே நல்ல பொழுது போக்கு
நல்லாயிருக்கோ இல்லையோ ஞாயிறு மதியம் சின்னத்திரை நட்சத்திரங்களின் கபடியாட்டம் நேயர்களுக்கு சரியான பொழுது போக்காகவே உள்ளது. டிஆர்பியும் எகிறத்தான் செய்கிறது.

பேயாக வந்து ஆடுறாங்களோ?
தெய்வமகள் சீரியல்ல காயத்ரியை சுட்டுட்டாங்களே... அப்புறம் எப்படி பேயாக வந்து கபடி ஆடுறாங்களோ என்று சில அப்பாவி இல்லத்தரசிகள் கேட்பது நம் காதில் விழாமல் இல்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications