ரஜினியை தமிழர் என்று அறிவிக்கக் கோரி போராட்டம்.. கிருஷ்ணகிரி காங்கிரஸ் தலைவர் அதிரடி!
கிருஷ்ணகிரி: நடிகர் ரஜினிகாந்த்தின் பூர்வீகம் கிருஷ்ணகிரி மாவட்டம். எனவே அவரை தமிழகத்தைச் சேர்ந்தவர், தமிழர் என்று அரசு அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக சட்ட ரீதியாக போராடப் போவதாக கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராமநாதன் என்பவர் திடீரென அறிவித்துள்ளார்.
வருவாய்த்துறை மற்றும் பதிவுத்துறை ஆவணங்களை ஆராய்ந்து பார்த்தபோது ரஜினியின் பூர்வீகம் கிருஷ்ணகிரிதான் என்று தெரிய வந்துள்ளதாகவும் ராமநாதன் கூறுகிறார். எனவே அவரை தமிழகத்தைச் சேர்ந்தவர், தமிழர் என்று அறிவிக்கக் கோரி சட்ட ரீதியாக போராட்டம் நடத்தப் போவதாக அவர் கூறியுள்ளார்.
எல்லாம் சரி, காவிரிப் பிரச்சினை எழுந்துள்ள நிலையில் இந்தக் கோரிக்கை ஏன் என்று அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ள தகவல்கள்:

நாச்சிக்குப்பம் ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் பூர்விகம் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனப்பள்ளி அடுத்துள்ள நாச்சிகுப்பம் ஆகும்., ரஜினிகாந்த்தின் தந்தை ரானேஜிராவ் மற்றும் அவரது தாயார் ராம்பாய் நாச்சிகுப்பம் வருவாய் கிராமத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

பிழைப்பு தேடி பெங்களூரு பயணம்
பிழைப்பு தேடி பெங்களூரு சென்றவர்கள் ரஜினிகாந்த்தின் பெற்றோர்கள். அவர்களுக்கு நினைவகம் வைத்து நாச்சிகுப்பம் கிராமத்திற்கு பல சேவைகள் செய்து வருகின்றனர். ரஜினிகாந்த் பெற்றோர்களின் நினைவகம் ராகவேந்திர அறக்கட்டளை மூலம் பராமாரிக்கப்பட்டு வருகிறது. அறக்கட்டளையின் தலைவராக ரஜினிகாந்த்தின் சகோதரர் சத்தயநாராயணராவ் இருந்து வருகின்றார்.

ஆதாரம் இருக்கு
இந்தியாவில் மொழிவாரி மாகானங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பே தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனப்பள்ளி சார்பதிவாளர் எல்லைக்கு உட்பட்டு நாச்சிகுப்பம் வருவாய் கிராமத்தில் ரஜினிகாந்த்தின் பெற்றோர்கள் மற்றும் முன்னோர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான ஆவணங்கள், ஆதாரங்கள் மற்றும் அசையா சொத்துக்கள் இன்றும் வேப்பனப்பள்ளியில் உள்ளது.

தமிழர்களை லட்சக்கணக்கான தமிழகர்கள் கர்நாடகத்தில் வாழ்ந்து வந்தாலும் அங்கேயே பிறக்கும் குழந்தைகளை கூட கர்நாடகாவினர் கன்னடர்களாக ஏற்றுக்கொள்வதில்லை. தமிழன் என்று அடிக்கின்றனர் அது போன்ற நிலையில் தான் நமது தமிழ் மண்ணிற்கு சொந்தமான ரஜினிகாந்த்தின் முன்னோர்கள் கர்நாடகா சென்று வாழ்ந்து வந்துள்ளனர். எனவே ரஜினிகாத்தை தமிழனாக அறிவிக்க வேண்டும் கோரிக்கை வைத்துள்ளேன்.
லட்சக்கணக்கான தமிழகர்கள் கர்நாடகத்தில் வாழ்ந்து வந்தாலும் அங்கேயே பிறக்கும் குழந்தைகளை கூட கர்நாடகாவினர் கன்னடர்களாக ஏற்றுக்கொள்வதில்லை. தமிழன் என்று அடிக்கின்றனர் அது போன்ற நிலையில் தான் நமது தமிழ் மண்ணிற்கு சொந்தமான ரஜினிகாந்த்தின் முன்னோர்கள் கர்நாடகா சென்று வாழ்ந்து வந்துள்ளனர். எனவே ரஜினிகாத்தை தமிழனாக அறிவிக்க வேண்டும் கோரிக்கை வைத்துள்ளேன்.

ராஜாஜி - ரஜினி!
மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிறந்து சுதந்திரத்திற்காக போராடி இந்திய நாட்டின் அரசியலில் முடிசூடா மன்னனாக மூதறிஞர் ராஜாஜியின் பூர்வீகம் கிருஷ்ணகிரி மாவட்டம், இன்று உலக அளவில் புகழ்பெற்று தமிழ்நாட்டிற்கும் இந்திய மண்ணிற்கும் பெருமை சோர்த்துள்ளார் ரஜினிகாந்த் கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழிர் என்று வரலாறு சொல்லவேண்டும்.

தமிழராக அறிவிக்க வேண்டும்
எனவேதான் தமிழக அரசுக்கும் தமிழக முதல்வர் அவர்களுக்கும் ரஜினிகாந்த்தின் பூர்வீகம் மற்றும் ஆவணங்களை வருவாய் துறை மற்றும் பதிவு துறை மூலம் ஆய்வு செய்து ரஜினிகாந்த் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று தமிழர் என்று அரசு அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக சட்ட
போராட்டம் நடத்தவும் தயார் என்று அவர் கூறியுள்ளார்.
-
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
சினிமாவை விடுங்க.. அரசியலிலும் ரஜினியை காப்பி அடிக்கும் விஜய்? கட்சி நிர்வாகிகளுடன் நடக்கும் மீட்டிங் -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications