எல்லாம் போச்சு.. அந்தரங்க தகவல்களை திருடிய மார்க்.. வைரலாகும் டெலிட் பேஸ்புக் ஹேஷ்டேக்!
Recommended Video

சென்னை: கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனமும் பேஸ்புக்கும் இணைந்து மக்களின் அந்தரங்கங்களை திருடியது பெரிய பிரச்சனை ஆகியுள்ளது. இதனால் தற்போது பேஸ்புக் அப்ளிகேஷனை டெலிட் செய்ய வேண்டும் என்ற ஹேஷ்டேக் வைரல் ஆகியுள்ளது.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது. அவர்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

மோசம்
இந்த பிரச்சனை, மோசடி எல்லாமே பேஸ்புக் நிறுவனத்திற்கு முன்பே தெரியும் என்று கூறப்படுகிறது. மார்க் ஜூக்கர்பெர்க் கொடுத்த அனுமதியின் பேரில்தான் இத்தனையும் நடந்து இருக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்க தேர்தலில் முறைகேடு நடந்தது மட்டுமில்லாமல் உலகம் முழுக்க எல்லா தேர்தலிலும் பேஸ்புக் வேலையை காட்டியதாக கூறப்படுகிறது.

என்ன தகவல்களை எடுக்கிறது
டவுன்லோட் செய்யும் போதே, பேஸ்புக் உங்களுடைய கேலரியை பயன்படுத்த அனுமதி வாங்கி இருக்கும். அதன்முலம் நீங்கள் எங்கெல்லாம் சென்றுள்ளீர்கள் என்ற விவரங்களை எடுக்கும். உங்கள் மெயில் ஐடி மூலம் நீங்கள் எப்படிப்பட்டவர் என்று ஆராயும். நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருளின் மூலம் எந்த அளவு உங்களிடம் காசு இருக்கிறது என்று கண்டுபிடிக்கும். அட, உங்களது பாலியல் சம்பந்தமான தேடல்களை கூட பேஸ்புக் கண்காணித்து இருக்கிறது.

பெரிய
இந்த விஷயம் வெளியே வந்த அடுத்த நொடி பெரிய புயலே உருவானது. அமெரிக்காவில் எந்நேரமும் பேஸ்புக்கே கதி என்று கிடந்தவர்கள் மொத்தமாக என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார்கள். பேஸ்புக் ஆரம்பித்த அமெரிக்காவிலேயே இந்த எதிர்ப்பும் ஆரம்பித்து இருக்கிறது.
|
கோரிக்கை
இந்த நிலையில்தான் பேஸ்புக் அப்ளிகேஷனை மொபைலில் இருந்து டெலிட் செய்யும்படி வாட்ஸ் ஆப் துணை நிறுவனர் பிரைன் ஆக்டன் கோரிக்கை வைத்துள்ளார். அதில் ''இதுதான் நேரம் உடனடியாக பேஸ்புக்கை டெலிட் செய்யுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த டிவிட் டெக் உலகில் பெரிய புயலை கிளப்பி இருக்கிறது.
|
வைரல் ஆனது
இதனால் தற்போது டெலிட் பேஸ்புக் ''#DeleteFacebook'' என்று ஹேஷ்டேக் டிவிட்டர் முழுக்க வைரல் ஆகி உள்ளது. பலரும் பேஸ்புக்கிற்கு எதிராக இதில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதோடு எப்படி பேஸ்புக் கணக்கை டெலிட் செய்ய வேண்டும் என்றும் நிறைய கட்டுரைகள் வெளியாகி இருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications