திமுகவை நேசிக்கும் டெல்லி இடதுசாரிகள்! எதிர்க்கும் பாஜக தலைவர்கள்!
சென்னை: காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று திமுக அறிவித்ததைத் தொடர்ந்து பாஜகவுடன் திமுக அணி சேருமா? இடதுசாரிகளுடன் இணையுமா? என்ற விவாதங்களுக்கு பஞ்சம் இல்லை.
சென்னையில் கடந்த 15-ந் தேதி நடைபெற்ற திமுக பொதுக் குழு கூட்டத்தின் முடிவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பாஜகவுடன் கூட்டணி அமையுமா? என்பது குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை. அதேபோல் 3வது அணி குறித்தும் திமுக தெளிவுபடுத்தவும் இல்லை.
திமுகவின் இந்த அறிவிப்பே, இடதுசாரிகளை இழுப்பதற்குத்தான் என்றும் கூட சொல்லப்படுகிறது. தமிழக அரசியல் நிலவரத்தைப் பார்த்தால் அடித்தே துரத்தினாலும் இடதுசாரிகள் ஒருபோதும் அதிமுக அணியைவிட்டு வெளியே வரமாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம்

டெல்லி இடதுசாரிகள் கணக்கு
ஆனால் டெல்லி இடதுசாரிகளோ தாங்கள் அமைக்கப் போகும் 3வது அணியில் திமுக இடம்பெறுவதை அதிகம் விரும்புகின்றனராம். அதே நேரத்தில் அதிமுக, 3வது அணியிம் இடம்பெறுவதற்கு டெல்லி இடதுசாரி தலைவர்களிடையே அவ்வளவு ஆர்வம் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

சீட் விவகாரத்தில் சிக்கல்?
அதிமுக கூட்டணியில் இடதுசாரிகள் இடம்பிடித்தால் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா ஒரு சீட்தான் கிடைக்கப் போகிறது. ஆனால் டெல்லி இடதுசாரித் தலைவர்களோ இரண்டு சீட் கூட கிடைக்கவில்லை என்றால் அசிங்கம் இல்லையா என்கின்றனராம்.

திமுக பரவாயில்லையே..
அத்துடன் திமுக அணியில் இருந்தால் கவுரமான தொகுதிகள் கிடைக்குமே என்பதும் டெல்லி இடதுசாரி தலைவர்களின் எண்ணமாக இருக்கிறதாம்.

முட்டுக்கட்டைகளுக்கு ஆப்பு
இப்படியான விவாதங்களின் போது தமிழகத்தில் டெல்லி மேலிட நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் தலைவர்களின் பதவிக்கு வேட்டுவைத்துவிட்டு திமுகவுடன் கை கோர்த்தால் என்ன என்று கூட ஆலோசித்திருக்கிறார்களாம்.

பாஜகவில் தலைகீழ்
ஆனால் பாரதிய ஜனதாவிலோ நிலைமை தலைகீழாக இருக்கிறது. தமிழக பாஜக தலைவர்கள், திமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் நல்லது எனக் கருதுகின்றனர்.

டெல்லியில் விருப்பம் இல்லை
டெல்லி பாஜக தலைவர்களோ, திமுகவை இன்னமும் 'திராவிடர்' இயக்கமாகவே பார்ப்பதால் எட்ட வைக்கவே விரும்புகிறார்களாம்.. தங்களுக்கான இயல்பான இயற்கைக் கூட்டணி அதிமுகதான் என்பது அந்த பாஜக தலைவர்களின் அசைக்க முடியாத எண்ணமாம். ஆனாலும் தமிழக பாஜகவினரின் நெருக்கடியை தவிர்க்க முடியாமல் டெல்லி தலைமை தவிக்கிறதாகவும் கூறப்படுகிறது.

பின்னணி இதுதானாம்
இப்படித்தான் டெல்லி அரசியல் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டுதான் திமுக தலைமை அதிரடியாக காங்கிரஸை உறவை கழட்டிவிட்டு டெல்லி தலைவர்களின் தூக்கத்தை தொலைக்க வைத்திருக்கிறதாம்..
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்?












Click it and Unblock the Notifications