அனுராதாவிடம் டெல்லி போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை- தினகரன் கதறல்!

வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக தினகரன் மனைவி அனுராதாவிடம் கடுமையாக விசாரித்திருக்கிறது டெல்லி போலீஸ்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக மனைவி அனுராதாவிடம் கடுமை காட்டி டெல்லி போலீஸ் விசாரணை நடத்தியதை தாங்க முடியாமல் டிடிவி தினகரன் கதறியிருக்கிறார். இதையடுத்து அவரை தனி அறையில் அடைத்து வைத்துவிட்டு அனுராதாவிடம் விசாரணையை தொடர்ந்தனராம் டெல்லி போலீஸ்.

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சிக்கினார் தினகரன். டெல்லி போலீஸ் அவரை 5 நாட்கள் கஸ்டடியில் எடுத்து சென்னைக்கு அழைத்து வந்தது.

தினகரன் வீட்டில்..

தினகரன் வீட்டில்..

சென்னையில் சிபிஐ அலுவலகத்தில் முதலில் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து தினகரன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு துருவி துருவி விசாரணை நடந்தது.

விசாரணையில் அனுராதா

விசாரணையில் அனுராதா

தினகரன் மனைவி அனுராதா, வெளிநாட்டு முதலீடுகளை கவனித்து வருகிறார். அதனால் அவரிடம் கிடுக்குப்பிடி கேள்விகளை டெல்லி போலீஸ் கேட்டது. ஆனால் அனுராதாவோ எல்லாவற்றுக்கும் மழுப்பலாகவே பதில் கூறியுள்ளார்.

மழுப்பல் அனுராதா.. கதறிய தினகரன்

மழுப்பல் அனுராதா.. கதறிய தினகரன்

ஒருசில கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அனுராதா திணறியுள்ளார். இதனால் நொந்து போன தினகரன், சார் ப்ளீஸ் அவரை விட்டுருங்க.. என்னிடம் எல்லா கேள்விகளையும் கேளுங்க என கதறியிருக்கிறார்.

அனுராதா கைது?

அனுராதா கைது?

ஆனால் இதை பொருட்படுத்தாத டெல்லி போலீசார், தினகரனை வேறு ஒரு அறையில் அடைத்துவிட்டு அனுராதாவிடம் விசாரணையை தொடர்ந்திருக்கின்றனர். இதனால் அனுராதாவும் இவ்வழக்கில் சிக்கும் நிலைமை உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+