தினகரன் வீட்டில் அங்குலம் அங்குலமாக தேடுதல் வேட்டை நடத்திய டெல்லி போலீஸ்...- வீடியோ

தினகரனை சென்னைக்கு அழைத்து வந்த டெல்ல்லி குற்றப்பிரிவு போலீஸ், அவரது வீட்டில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தியது. இதனால் அவரது சகாக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெசன்ட் நகரில் உள்ள தினகரன் வீட்டை டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் அங்குலம் அங்குலமாக ஆராய்ந்தது. மேலும் தினகரன் மனைவி அனுராதாவிடமும் பல மணிநேரம் விசாரணை செய்தது.

தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ள இலை சின்னத்தை மீட்பதற்கு தேர்தல் ஆணையத்துக்கு இடைத்தரகர் மூலம் தினகரன் லஞ்சம் கொடுத்தார் என டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளது. டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்படுத்தப்பட்டு, 5 நாள் காவலில் எடுத்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்.

 Delhi police had inquiry at Dinakaran's house at Chennai

விசாரணையின் முதல்கட்டமாக சென்னைக்கு அழைத்து வந்து, பெசன்ட் நகரிலுள்ள தினகரன் வீட்டில் நான்கு மணிநேரம் விசாரணை செய்தனர். அப்போது அவரது மனைவி அனுராதாவும் உடன் இருந்தார். விசாரணையின் ஒரு பகுதியாக தினகரனின் வீடு அங்குலம் அங்குலமாக சோதனை செய்யப்பட்டது.

மேலும், அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த பிரமுகர்கள் யாரேனும் இரட்டை இலையை மீட்க பணம் கொடுத்த வழக்கில், உதவியிருக்கிறார்களா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையை அடுத்து தினகரன் இன்று கொச்சினுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு ஏதேனும் முக்கிய துப்புகள் கிடைக்கலாம் என டெல்லி குற்றப்பிரிவு போலீசார் எதிர்பார்க்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+