எந்த ராசிக்காரங்களுக்கு எந்த பேங்ல பணம் கிடைக்கும்? ராசிபலன் படிச்சிட்டு போங்க
பணப்பிரச்சினை 12 ராசிகளுக்கும் போட்டு தாக்கும் பிரச்சினைதான். எந்த ராசிக்கு எப்படி இருக்கும் என்று ராசிபலன் போட்டுள்ளனர். ஃபேஸ்புக்கில் இது வைரலாகி வருகிறது.
சென்னை: பணப்பிரச்சினை பலரையும் பாடாய் படுத்துகிறது. மீம்ஸ் போட்டு கிண்டலடிக்கின்றனர். பலர் ஜோக் எழுதி ஆறுதல் பட்டுக்கொள்கின்றனர். பொம்மையா முருகன் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ராசிபலானாகவே பதிவிட்டுள்ளார் படியுங்கள்.
#மேஷ ராசி நேயர்களே... உங்களுக்கு ஏற்கனவே அஷ்டமத்துல சனி,எட்டுல குரு தொட்ட காரியம் எதுவும் வழக்கம் போல விளங்காது... ஏடிஎம் லைன்ல ரெண்டாவது ஆளா நின்னாலும் இருநூறாவது ஆளா நின்னாலும் உங்க டேர்ம் வரும்போது மெஷின்ல பணம் இல்லாம போயிடும் இன்றய உங்கள் அதிர்ஷ்ட எண் 500 மளிகைக்கடையிலிருந்து டீக்கடை வரை இந்த செல்லாத ஒத்த ஐநூறு ரூபாய காட்டியே இந்த வருஷத்த ஓட்டிடுவீங்க... ஆகமொத்தம் இந்த நாள் உங்களுக்கு சிறந்த நாள்.

#ரிஷப ராசி நேயர்களே இந்த நாள் உங்களுக்கு பொன்னான நாள்... நீங்க கடந்த ஒருவாரமா தேடிட்டிருந்த என்னைக்கோ ஓபன் பண்ணி மறந்து போன பேங்க் அக்கௌண்ட் பாஸ்புக் இன்னைக்கு கிடைச்சி மத்த இந்திய குடிமகன்கள் மாதிரி நீங்களும் இன்னைக்கு பேங்க் க்யூவுல போய் நிப்பீங்க ஆனா பாருங்க உங்க தலையெழுத்து நல்லா இருந்தாலும் கையெழுத்து நல்லா இல்லாததால(மறந்து போனதால)பேங்க்ல அக்கௌண்ட் ஓப்பனிங்கப்ப போட்ட பாழாப்போன அந்த இருநூறு ரூபாய எடுக்க முடியாமயே திரும்பிடுவீங்க...
#மிதுன ராசிநேயர்களே இன்று உங்களுக்கு மாலை 5.30 வரை சந்திராஷ்டமம்... அதாவது உங்களுக்கு வாயில் வாஸ்த்து சரியில்ல... பேங்க் க்யூவுல நிக்கும் போது உங்களுக்கு முன்னாடி நிக்கிறவன் மோடிய புகழ்ந்து பேசுவான் பின்னாடி நிக்கிறவன் திட்டிப் பேசுவான் ரெண்டுக்கும் மையமா தலைய ஆட்டி வைங்க கருத்து சொல்றேன்னு வாயில வெத்தல பாக்கு போட்டுக்காதீங்க...
#கடகம் ஏடிஎம் செக்யூரிட்டி மாதிரியான உயர்பதவிகள் வகிக்கும் யோகம் கொண்ட கடக ராசி நேயர்களே இன்றைக்கும் உங்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும் உம் பொண்டாட்டி யாருக்கூடவோ ஓடிட்டான்னு வந்து சொன்னாக்கூட அதெல்லாம் எனக்கு தெரியாது போய் லைன்லு நில்லுன்னு டென்சனா டெம்பிளேட் பதில சொல்லுவீங்க... இருந்தாலும் லைன்ல நிக்கிற எதுனா ஒரு வசூல்ராஜா கட்டிபிடி வைத்தியம் பண்ணி உங்கள கூல் பண்ற வாய்ப்பு இருக்கு...
#சிம்மம் கம்பீரத்துக்கும் ஜபர்தஸ்த்துக்கும் பேர் போன சிம்ம ராசி நேயர்களே இன்று நீங்க வெளிய கிளம்பும் போது மதிப்பு மிக்க சில்லறை பணமெல்லாம் பாக்கெட்டுல இருக்கான்னு செக் பண்ணிட்டு கிளம்புங்க இல்லைன்னா டீக்கடைல டீயும் பண்ணும் சாப்டுட்டு 500 நோட்டுதான் இருக்குன்னு வழிய நேரும்... மற்றபடி இன்னைக்கும் வழக்கம்போல கால்கடுக்க ஏடிஎம்ல நின்னு மினி ஸ்டேட்மெண்ட் எடுத்துட்டு வருவீங்க....
#கன்னி ராசி நேயர்களே இன்று உங்களுக்கு யோகமான நாள் உங்களுக்கு அருகாமையிலிருக்கும் ஏடிஎம் எல்லாம் கூட்டமில்லாம காலியா இருக்கும் ஆனா கொடுமையா இன்னைக்குப் பாத்து உங்க அக்கௌண்ட்ல பணமிருக்காது... இந்த அவல நிலை தீரனும்னா அதுக்கு இருக்கிற ஒரே பரிகாரம் உங்க அக்கௌண்ட்ல பணத்த போட்டு வச்சிக்கிறதுதான்...
#துலாம் எதையும் சீர்தூக்கி ஆராய்ந்து தீர்ப்பு சொல்லும் துலாம் ராசி நேயர்களே... இந்த பேங்க் கார்டு எடுத்துட்டு போலாமா இல்ல அந்த பேங்க் கார்டு எடுத்துட்டு போலாமான்னு நீங்க ஆராய்ஞ்சிட்டு இருக்கும் போது வீட்டம்மா ரேஷன் கார்ட எடுத்துட்டு போய் சக்கரை வாங்கிட்டு வாங்கன்னு வெரட்டுவாங்க அந்த கடமைய செஞ்சி முடிச்சிட்டு கடேசில இங்கி பிங்கி பாங்கி போட்டு செலக்ட் பண்ண கார்ட எடுத்துட்டுப் போயி ஏடிஎம் ல நின்னு ஆட்சியாளர்கள திட்டுற கடமைய இன்று செவ்வனே ஆத்துவீங்க...
#விருச்சிக ராசி நேயர்களே... உங்களுக்கு விசுவாசமான படை எப்போதுமே உண்டு அதிலும் நீங்கள் கொடுக்கும் காசோலைகள் அனைத்துமே விசுவாசத்துக்கு பேர் போனவை ஒரு முறையாவது வழக்கம்போல அய்யா என உங்களை ரிட்டனாக வந்து பாத்து விட்டுபோகும்... மற்றபடி வேலை பளுவிலிருந்த பேங்க் மேனேஜர் இன்று முதல் செக் ரிட்டன்களுக்காக மறுபடியும் திட்ட ஆரம்பிக்கும் உன்னதமான நாள் இந்நாள்...
#தனுசு ராசி நேயர்களே இந்நாள் உங்களுக்கு சுமாரான நாள்... வங்கி நீண்ட வரிசையில் உங்களுக்கு முன்னால் பத்தாவதாக இருக்கும் ஆள் பான் பராக் போட்டு துப்பினாலும் பத்து நபர்களையும் கடந்து உங்கள் மேல் மட்டுமே சாரல் தெளிக்கும் வரிசையில் முன்னே பின்னே இருப்பவர்களால் உங்கள் கால்கள் மானாவாரியாக மிதிப்பட வாய்ப்புகள் அதிகம் ஆகவே இன்று ஏடிஎம் மற்றும் வங்கிகளுக்கு போகாமல் தவிர்ப்பது நல்லது...
#மகர ராசி நேயர்களே... இன்று உங்களுக்கு நான் என்னத்தை சொல்வது... சுறுக்கமாக சொன்னால் ஜான் ஏறினால் முழம் சறுக்குவீர்கள்.... ஏடிஎம்ல் 4000 கேட்டால் ஊஹூம் 2000 மட்டும் தான் அலோவ்டு என இயந்திரம் முரண்டு பிடிக்கும் சரி 2000 கொடு என்றால் உன் அக்கௌண்ட் பேலன்சே எழுபது ரூபாய் முப்பது பைசாதான் என காரி....சாரி... பேப்பரை துப்பும்....
#கும்ப ராசி நேயர்களே... உங்களுக்கு இன்று பூரண கும்ப மரியாதைதான்.. வங்கி வரிசையில் நிற்கும் உங்களைவிட்டு மற்றவர்கள் கொஞ்சம் தள்ளியே நிற்பார்கள் உங்களை பெண்கள் நமுட்டு புன்கையுடன் கடப்பார்கள் நீங்கள் பெருமிதம் கொள்வீர்கள்... அப்போது ஒருவர் வந்து சொல்லுவார்... சார் ஜிப்ப போடுங்க என்று.... இன்று உங்கள் ராசியான நிறம் பர்பிள் அதுக்காக ஏடிஎம் ல அதே நிறம் கொண்ட 2000 ரூபா நோட்டு வரும்னு எதிர்பார்க்காதீங்க...
#மீன ராசி நேயர்களே இன்று உங்கள் கிரம் அனைத்துமே ஒன்றுக்கொன்று குழப்பமாக சுற்றிக் கொண்டிருக்கிறது குறிப்பாக செவ்வாயை மங்கள்யான் மறைப்பதால் உங்களுக்கு 2000 கிடைப்பது அரிதே... கிரகங்கள் குழப்பமாவே சுத்துவதாலே டாஸமாக் பக்கத்துல இருக்கிற ஏடிஎம் க்கு போகாதீங்க அங்க உங்களுக்கு மினி ஸடேட்மெண்ட் கூட கிடைக்காது.பதிலா எதுனா கல்யாண மண்டபம் பக்கத்துல இருக்கிற எடிஎம் ட்ரை பண்ணுங்க ரெண்டரை லட்சத்தோட பொண்ணேக் கூட கிடைக்கலாம்...
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications