பழைய ரூபாய் வாங்குவது நிறுத்தம்… பொதுமக்கள் தவிப்பு
ரயில்வே டிக்கெட் கவுண்டர்களில் பழைய ரூபாய் நோட்டுக்கள் வாங்குவது நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
நெல்லை: பழைய ரூபாய் நோட்டுகளை ரயில்வே நிர்வாகம் வாங்குவதை நிறுத்தி விட்டதால் பண தட்டுபாடு அதிகரித்து வருகிறது.
கடந்த மாதம் 8ம் தேதி நள்ளிரவு பிரதமர் மோடி, 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அப்போது தொடங்கிய பண தட்டுபாடு ஒரு மாதம் கழித்த பிறகும் தொடர்கிறது. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. குறிப்பிட்ட கால கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் பெட்ரோல் பங்குகளில் மாற்றுவதற்கான கால அவகாசம் கடந்த 2ம் தேதியுடன் முடிந்தது.

ரயிலில் பயணிப்பதற்கான டிக்கெட்டுக்கு பழைய ரூபாயை பெற்று வந்த நிலையில் அவையும் நேற்று முன்தினம் இரவுடன் நிறுத்தப்பட்டது. இதனால் பல இடங்களில் உள்ள ரயில் நிலையத்தில் பழைய ரூபாயை ஏற்கவில்லை. இது போல் பஸ் நிலையங்களிலும் 500 ரூபாய் நோட்டுகளை வாங்குவது நிறுத்தப்பட்டிருந்தது.
மாலை வரை வங்கிகளில் முன்பு ஏடிஎம்மில் பணம் எடுக்க கூட்டம் அலைமோதியது. ஏடிஎம்களில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே வருகின்றன. பல ஏடிஎம்கள் இன்னும் திறக்கப்படாமல் மூடி கிடக்கின்றன. பணம் நிரப்பப்படும் ஒரு சில ஏடிஎம்களிலும் 2 மணி நேரத்தில் பணம் தீர்ந்து விடும் நிலை உள்ளது. புதிய 2 ஆயிரம் நோட்டுக்கு சில்லரை தட்டுபாடு நிலவுவதால் பலரும் வங்கிகளில் 100 ரூபாய் நோட்டுக்களாக கேட்கின்றனர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications