ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வந்தாலும் தே.மு.தி.க போட்டியிடாது: விஜயகாந்த்
ஆர். கே. நகரில் இடைத்தேர்தல் வராது அப்படி நடந்தாலும் தேமுதிக போட்டியிடாது என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை : இடைத்தேர்தல் நடப்பதற்கு பதிலாக சட்டசபை தேர்தல்தான் விரைவில் வரும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். டெங்குவினால் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளது வருகின்றனர். டெங்குவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தே.மு.தி.கவின் அனைத்து மாவட்டங்கள் சார்பாக, அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை, 'இயன்றதைச் செய்வோம்... இல்லாதவர்க்கே' என்ற பாணியில் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் டெங்கு மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். பின்னர் அவர்களுக்கு பழம், ரொட்டி வழங்கினார். பெண்கள் வார்டுக்கு சென்று அங்கு சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். தேரடி, பஜார் வீதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

இரண்டாவது நாளாக இன்று சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஆய்வு மேற்கொண்டார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விஜயகாந்த் நலம் விசாரித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு காய்ச்சலுக்கு நிறைய பேர் மரணமடைகின்றனர். காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2000 பணம் கொடுத்தா போதுமா?. காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி தர வேண்டும் என்றார்.

மருத்துவமனைகள் தினசரியும் சுத்தம், சுகாதாரமாக இருக்க வேண்டும். டெங்கு ஒழிப்புக்கு கூடுதல் நிதி ஒழிக்க வேண்டும் என்று கூறினார். மத்திய குழு வந்து எதுவும் நடக்கப் போவதில்லை என்றார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், தேமுதிக போட்டியிடாது. இடைத்தேர்தல் வராது, சட்டசபை தேர்தலே வரும் என்றார். டெங்குவினால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications