எதிர்க்கட்சிகளை கண்டு டெங்கு பயந்து ஓடியே போச்சு.. செல்லூர் ராஜூ அதகளம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்க்கட்சியையும் அரசின் நடவடிக்கையையும் கண்டு டெங்கு பயந்து ஓடிப்போய் விட்டதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி சமூக வளைதளங்களில் பெரும் பிரமாகிவிட்டார். அவரது தெர்மாககோல் புராஜெக்ட் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்க்கு ஒரு பெரும் வரமாக இருந்தது.

இதைத்தொடர்ந்து டெங்குவை தடுக்க வீட்டு வாசலில் சாணம் தெளிக்க வேண்டும் என என்பது உள்ளிட்ட அவரது கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் தேசிய அக்மார்க் உணவுபொருள் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

சீல் வைக்கப்படும்

சீல் வைக்கப்படும்

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தரச்சான்று பெற்ற பொருட்களை மட்டும் பொதுமக்கள் வாங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். கலப்படம் செய்யப்படும் பொருட்களின் தொழிற்சாலைக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பயந்து ஓடியே போச்சு

பயந்து ஓடியே போச்சு

எதிர்க்கட்சிகளையும் அரசின் நடவடிக்கையையும் கண்டு டெங்கு காய்ச்சல் மற்றும் வெள்ளமெல்லாம் பயந்து ஓடி விட்டதாக தெரிவித்தார். முன்பெல்லாம் ஒன்று அல்லது இரண்டு காய்சல்கள்தான் இருக்கும் என்ற அவர், தற்போது 29 காய்ச்சல்கள் உள்ளது என்று கூறினார்.

நகைச்சுவை மன்னர்

நகைச்சுவை மன்னர்

மேலும் அரசை விட திமுக சிறப்பாக செயல்படுகிறது என ஸ்டாலின் கூறியது சிறந்த ஜோக் என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்தார். நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு திமுக காரணம் எனக் கூறும் ஸ்டாலின் உலகின் மிகச்சிறந்த நகைச்சுவை மன்னர் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

நகைச்சுவை மன்னர் என கூறலாமா?

நகைச்சுவை மன்னர் என கூறலாமா?

அமைச்சர்களை எல்லாம் விஞ்ஞானி என கூறும் ஸ்டாலினை நகைச்சுவை மன்னர் என கூறலாமா? என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Sellur raju said Dengue fever ran away by threaten of opponent parties. He said Stalin is comedy king.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற