சென்னையை மிரட்டும் “டெங்கு”- காய்ச்சல் வந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய அறிவுறுத்தல்!
சென்னை: சென்னையில் டெங்கு காய்ச்சல் படு வேகமாக பரவி வருகின்ற காரணத்தினால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவலாக உள்ளது. நகரின் பல பகுதிகளிலும் இந்நோய் பாதித்தவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக வடசென்னை பகுதியில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
பெரம்பூர், புளியந்தோப்பு, வியாசர்பாடி, அயனாவரம், ஓட்டேரி மற்றும் முகப்பேர், ஜெ.ஜெ.நகர் பகுதியிலும் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவு இருப்பது தெரிய வந்துள்ளது.

கொசுக்களால் பரவும் காய்ச்சல்:
"ஏடீஸ்" என்ற கொசுக்கள் மூலம் டெங்கு நோய் பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, உடல்வலி, கண் எரிச்சல் போன்ற அறிகுறிகளை கொண்ட இந்நோயை கவனிக்காமல் விட்டு விட்டால் உயிர் இழப்பை ஏற்படுத்தி விடும்.

ரத்தப் பரிசோதனை அவசியம்:
காய்ச்சல் விட்டு விட்டு வந்தால் உடனடியாக ரத்தப்பரிசோதனை செய்து கொள்வது நல்லது. 5 நாட்களுக்கு மேலாக காய்ச்சல் நீடித்தால் டெங்கு "பாசிட்டிவ்" மருத்துவ முடிவு வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

உடல் சோர்வு அதிகம்:
சாதாரண காய்ச்சல் என்றால் 5 நாட்களில் சரியாகி விடும். டெங்கு காய்ச்சல் பாதிப்பு உடல் சோர்வை ஏற்படுத்தி ரத்தத்தின் அணுக்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். "பிளேட் லெட்ஸ்" என்று சொல்லக்கூடிய இந்த அணுக்கள் ரத்தத்தில் குறைய குறைய ஆபத்தை ஏற்படுத்தும்.

மருத்துவரை அணுகுங்கள்:
அதனால் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். தண்டையார் பேட்டையில் கடந்த மாதம் ஒரு குழந்தை டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தது.

கொசு உற்பத்தியை தடுத்தல்:
சென்னையில் டெங்கு குறித்த விழிப்புணர்வு சுகாதாரத்துறை மூலம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகளை சுற்றி மழைநீர் தேங்காமல் பார்த்து கொண்டாலே "ஏடீஸ்" கொசு உற்பத்தியை தடுக்கலாம்.

டெங்குவால் சிகிச்சை:
பயன்படுத்தாத பழைய பொருட்களை வீட்டை சுற்றி இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும். சென்னையை பொறுத்த வரை மாநகராட்சி தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும் ஒன்று, இரண்டு கேஸ்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications