For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குட்கா விற்கவே மாமூல் வாங்கியவர்கள் டெங்கு பரவுவதற்கும் வாங்குகிறார்களா?: ஸ்டாலின் பொளேர்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: குட்கா விற்கவே மாமூல் வாங்கியவர்கள் தற்போது டெங்கு பரவுவதற்கு மாமூல் வாங்குகிறார்களா என்ற சந்தேகம் எங்களுக்கும், மக்களுக்கும் எழுந்துள்ளது என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டெங்குவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. டெங்கு காய்ச்சலுக்கு பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Dengue row: MK Stalin has a doubt

கைக்குழந்தை, சிறியவர்கள், பெரியவர்கள் என்று பலர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். டெங்கு காய்ச்சலை நினைத்து தமிழக மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் டெங்கு காய்ச்சலை ஒழிக்க அரசு ரூ. 16 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினிடம் கேட்டனர்.

அதற்கு அவர் கூறியதாவது,

பணம் எல்லாம் ஒதுக்குகிறார்கள். ஆனால் அந்த பணம் எங்கே போகிறது? ஏற்கனவே குட்கா விற்கவே மாமூல் வாங்கியவர்கள் தற்போது டெங்கு பரவுவதற்கு மாமூல் வாங்குகிறார்களா என்ற சந்தேகம் எங்களுக்கும், மக்களுக்கும் உள்ளது என்றார்.

English summary
DMK acting president MK Stalin doubts Tamil Nadu government's actions over controlling the spread of dengue in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X