குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பு- தமிழகத்தில் மழை தொடரும்!
சென்னை: வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் பெய்துவருகிறது. இலங்கை அருகே வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது வலுப்பெற்று தாழ்வு பகுதியாக மாறியது. அது மேலும் தீவிரம் அடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்றே மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இனிமேல் அது வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மண்டல இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் நேற்று முன்தினம் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருந்தது அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.
அது இன்னும் 24 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளது. ஆனால் எந்த திசைக்கு செல்லும் என்று இப்போது கூறமுடியாது. அது போகும் திசையைப் பொருத்துதான் இனிமேல் பெய்யக்கூடிய மழை எந்த அளவுக்கு எங்கே பெய்யும் என்று சொல்ல முடியும்.
அது வடக்கு நோக்கி நகர்ந்துவிட்டால், தமிழ்நாட்டில் மழை குறையும். இன்று தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பல இடங்களிலும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யும். சென்னையில் சில நேரங்களில் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications