துணை மேயராக இருந்து மதுரை எம்.பி வேட்பாளரான கோபாலகிருஷ்ணன்
மதுரை: மதுரை மாநகராட்சியின் துணை மேயராக உள்ள கோபாலகிருஷ்ணன் லோக்சபா தொகுதியின் எம்.பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
காரணம் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுதான். முக்குலத்தோர், சௌராஷ்டிரா சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோபாலகிருஷ்ணன் எம்.பி வேட்பாளராகி உள்ளார்.
மதுரை அருகில் உள்ள முடக்கத்தான் கிராமத்தில் பிறந்த கோபாலகிருஷ்ணனின் தந்தை எஸ்.ராமநாதன், தாயார் லட்சுமியம்மாள்.

பிகாம் பட்டதாரியான கோபாலகிருஷ்ணன், 1968 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இவர் கலப்புத்திருமணம் செய்து கொண்டவர். இவரது மனைவி தீபா எம்.காம் பட்டதாரி. இவருக்கு ராம்பிரசாத் (14) என்ற மகனும், சௌபர்ணிகா (16) என்ற மகளும் உள்ளனர்.
துணைமேயர் பதவி
முன்னாள் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச்செயலர். மதுரை மாநகராட்சித் தேர்தலில் 2011-இல் மாமன்ற உறுப்பினராக முதன்முறையாக போட்டியிட்டு தேர்வு வெற்றி பெற்றார் பின்னர் துணைமேயராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்
ஐ.ஏ.எஸ் அதிகாரியின் உறவினர்
துணைமேயராக அறிவிக்கப்பட்ட போதே அதிமுகவினரால் ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டார். இவர் வளம் கொழிக்கும் துறையை கவனித்து வந்த ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் உறவினராம்.
அமைச்சருக்கு நெருக்கம்
நால்வரணி அமைச்சர்களில் ஒருவருக்கு மிகவும் நெருக்கமாம். மதுரை தொகுதி ஒருவேளை மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டாலும் கோபாலகிருஷ்ணனுக்கு வேறு வழியில் அதிர்ஷ்டம் நிச்சயம் என்கின்றனர் அதிமுகவினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications