திருட்டு மோட்டார் சைக்கிளில் வேகமாகப் போய் மைல்கல்லில் மோதி பலியான திருடன்!
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற வாலிபர் ஒருவர் மைல்கல்லில் மோதி பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேவகோட்டை பஸ் நிலையம் முன்பு செல்போன் கடை வைத்து இருப்பவர் கோடிஸ்வரா முருகன்.
தேவகோட்டையில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் நேற்று இரவு கோடிஸ்வரா முருகன் மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு சென்றார்.
திருட்டுப் போன மோட்டார் சைக்கிள்:
கோவில் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாமி கும்பிட சென்றார். சாமி கும்பிட்டு விட்டு வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து கோடிஸ்வரா முருகன் தேவக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
விபத்துக்குள்ளான திருடன்:
இந்த நிலையில் மோட்டார் சைக்கிளை திருடிய இளைஞர் அதனை வேகமாக ஓட்டி சென்றார். பாவனக்கோட்டை என்ற இடத்தில் சென்றபோது சாலை ஓரம் இருந்த மைல் கல்லில் மோட்டார் சைக்கிள் மோதியது.
காயங்களுடன் மயக்கம்:
இதில் கீழே விழுந்த இளைஞருக்கு தலையில் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அந்த வழியாக சென்றவர்கள் சாலை ஓரம் வாலிபர் ஒருவர் காயங்களுடன் கிடப்பதாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
உயிரிழந்த இளைஞர்:
உடனே அவரை மீட்ட காவல்துறையினர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி இரவு 2 மணி அளவில் அந்த வாலிபர் இறந்துவிட்டார். அவரைப் பற்றிய விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications