"கடவுளே.. விக்ரம் லேண்டர் நிலாவுல பத்திரமா தரையிறங்கணும்".. மழலைகளின் பிரார்த்தனை
விக்ரம் லேண்டர் பத்திரமாக தரையிறங்க மாணவர்கள் பிரார்த்தனை செய்தனர்
Recommended Video
தேவகோட்டை: "கடவுளே.. விக்ரம் லேண்டர் நிலாவுல பத்திரமா தரையிறங்கணும்" என்று பள்ளி மழலைகளின் பிரார்த்தனை நெகிழ வைத்துள்ளது
சில வருடங்களாகவே பள்ளி குழந்தைகளுக்கு முன்மாதிரியாக விளங்கி கொண்டு வருவது சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிதான்.

இயற்கை சீற்றத்துக்கு உண்டியல் குலுக்கி வசூலித்து பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு தருவார்கள் இந்த பள்ளி குழந்தைகள். அது சொற்ப பணமே ஆயினும், இதற்கெல்லாம் காரணம், அந்த ஸ்கூல் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம்தான்.

கடந்த ஜூலை மாதம், நம் விஞ்ஞானிகள் ரூபாய் 1000 கோடி மதிப்பில் சந்திரயான்-2 விண்கலத்தை செலுத்தியதற்குகூட, இந்தபள்ளி மாணவர்கள் கைதட்டி, ஆரவாரம்செய்து, பலூன்களை பறக்க விட்டனர்.

பொதுவாக செயற்கை கோள், விண்கலம் பற்றிய முழு விவரங்களும் பள்ளி குழந்தைகளுக்கு தெரிய வாய்ப்பிருக்காது. இருந்தாலும், பிள்ளைகளுக்கு புரியும் வகையில் அதை எடுத்து சொல்பவர் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம்தான்.

இன்றும்கூட ஒரு கூட்டு பிரார்த்தனை அந்த பள்ளியில் நடந்துள்ளது. சந்திரயான்-2 விண்கலம் விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையில் இறங்க வேண்டும் என்று பிள்ளைகள் வேண்டி கொண்டனர்.

மேலும் விடா முயற்சியுடன், நம்பிக்கையுடன் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க உள்ள சந்திரயான் -2 யை வடிவமைத்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், தலைவர் சிவன் அவர்களது கூட்டு முயற்சிக்கும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications