‘அடப்பாவி, உனக்கு லவ்வெல்லாம் கூட வருமா’.... கலக்கும் "டப்ஸ்மாஷ்"!

Subscribe to Oneindia Tamil

சென்னை : டப்ஸ்மாஷ் என்ற மொபைல் ஆப் தான் தற்போது பட்டையைக் கிளப்பி வருகிறது.

இதில், பல்வேறு பிரபலமான பட வசனங்கள் இடம் பெற்றிருக்கும். அந்த ஆடியோவை ஓடவிட்டு, படத்தில் நடிகர் காட்டிய ரியாக்‌ஷனை நடித்துக் காட்டி அதை வீடியோவாக பதிவு செய்வது தான் டப்ஸ்மாஷ்.

வயது வித்தியாசமில்லாமல் பலரும் இந்த டப்ஸ்மாஷ் உதவியுடன் தங்களுக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் நடிகர்களை தட்டி எழுப்பி தடாலடியாக வெளியே விட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தனுஷின் வேலையில்லாப் பட்டதாரி, வை ராஜா வை பட வசனங்களும் டப்ஸ்மாஷில் படு பிரபலம். அதனை நடித்துக் காட்டி அந்த வீடியோவை தனுஷின் டுவிட்டர் பக்கத்திலும் பதிவு செய்துள்ளனர் சில ரசிகர்கள்.

சூப்பர்...

வேலையில்லா பட்டதாரி படத்தில் சரண்யா தனது மகனான தனுஷுடன் பேசும் வசனத்தை, பெண் ஒருவர் சிறுவனுடன் பேசும் வீடியோ சூப்பர்.

ஹாய் அமுல்பேபி...

இதேபோல், ஒரு வீடியோவில் இரண்டு பெண்கள் வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் வில்லனுடன் பேசும் அமுல்பேபி வசனத்தை பேசிக் காட்டுகிறார்கள்.

குமாரு... கொக்கு குமாரு

மேலும், சில வீடியோக்களில் தனுஷின் கொக்கி குமார் வசனத்தை இளைஞர்கள் பலர் நடித்துக் காட்டுகின்றனர். அனைத்துமே ரசிக்கும் ரகம் தான்.

நீ வீட்லயே தான இருக்க...

வேலையில்லா படத்தில் சமுத்திரக் கனியும் தனுஷும் பேசிக் கொள்ளும் ‘நா வீட்ல தானே இருந்தேன்' டயலாக்கையும் ரசிகர் ஒருவர் நடித்துக் காட்டியிருக்கிறார் அசத்தலாக.

நீ சுமாரு தான்...

அதேபோல், தனுஷ் அமலாபாலைப் பார்த்து பேசும் ‘போலீஸ்னா பயந்துடுவமா' டயலாக்கையும் சாலையில் வைத்தே இளைஞர் ஒருவர் நடித்துக் காட்டுகிறார்.

அட, இது சூப்பரோ சூப்பர்

நடிகை ராதிகாவும், அவரது மகள் ரேயானும் சேர்ந்து அடப்பாவி, உனக்கு லவ்வெல்லாம் கூட வருமா என்ற வேலையில்லாப் பட்டதாரி வசனத்தை அப்படியே பேசியிருப்பது அசத்தல் ரகம்.

கொஞ்சம் நடிங்க பாஸ்....

ஆக மொத்தத்தில் ஒவ்வொருவரும், ‘கொஞ்சம் நடிங்க பாஸ்' எனத் தன்னைத் தானே சொல்லிக் கொள்ள இந்த டப்ஸ்மாஷ் ரொம்பவே ஹெல்ப் பண்ணுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+