கஸ்தூரி ராஜா மகன் அல்ல தனுஷ்.... எங்கள் மகன்: திருப்புவனம் தம்பதி புது குண்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தனுஷ் கஸ்தூரி ராஜா மகன் அல்ல தங்களின் மகன் என திருப்புவனத்தை சேர்ந்த தம்பதி தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மருமகன் தனுஷ் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன்-மீனாள் தம்பதி புது குண்டை போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

Dhanush is our son: Claims a couple

சிவகங்கை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டைம்கீப்பராக உள்ளார் கதிரேசன். இந்நிலையில் தனுஷ் பற்றி கதரேசன்-மீனாள் தம்பதி கூறியிருப்பதாவது,

எங்கள் மகன் கலையரசன் கடந்த 2002ம் ஆண்டு பிளஸ் 1 படித்துக் கொண்டிருந்தபோது எங்களை விட்டுப் பிரிந்து சென்னைக்கு சென்றார். சென்னை சென்ற எங்கள் மகன் தான் தற்போது தனுஷ் என்ற பெயரில் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

நடிகராகிய பிறகு அவர் எங்களை பார்க்க வரவில்லை. நாங்கள் அவரை பார்க்க சென்னை சென்றால் கஸ்தூரி ராஜாவின் குடும்பத்தார் எங்கள் மகனை சந்திக்கவிடாமல் தடுக்கிறார்கள்.

இது குறித்து காவல் நிலையம் மற்றம் முதல்வரின் தனிப்பிரிவிலும் புகார் அளித்துள்ளோம் என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+