பச்சை துரோகம் செய்த தர்மபுரி அமலா.. அந்த நர்ஸ் செல்போனை வாங்கி பார்த்தால்? நிலைகுலைந்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: தர்மபுரியில் நடந்த பகீர் சம்பவம் குறித்து போலீசார் துரிதமாக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.. என்ன நடந்தது?

தர்மபுரி அருகே ராணுவ வீரரின் மனைவி, குழந்தைகளை கடத்திச் சென்ற அரசு மருத்துவமனை ஊழியரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் பல பெண்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது.

Dharmapuri Nurse

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ளது ஆலமரத்துப்பட்டி என்ற கிராமம்.. இங்கு வசித்து வருகிறார் சமதர்மம்.. இவருக்கு 46 வயதாகிறது.. மிசோரம் எல்லையில் ராணுவ வீரராக (பிஎஸ்எப்) பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெயர் அமலா.. 35 வயதாகிறது.. பிளஸ் 2 வரை படித்திருக்கிறார் அமலா.

இந்த தம்பதிக்கு 17 வயதில் மகன், 15 வயதில் மகள் இருக்கிறார்கள்.. ராணுவத்திலிருந்து 6 மாதத்திற்கு ஒருமுறை ஊருக்கு வந்து செல்வார் சமதர்மம்.

திடீர் மாயம்: இந்நிலையில் கடந்த 28ம் தேதி முதல் அமலாவையும், அவரது மகன், மகளையும், அமலாவின் அம்மாவையும் திடீரென காணவில்லை... இதனால் பதறிப்போன சமதர்மம், பாப்பாரப்பட்டி போலீசில் இதுகுறித்து புகார் தந்தார். போலீசாரும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

அப்போதுதான், தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே மடதஅள்ளி கிராமத்தை சேர்ந்த அதியமான் என்பவர், இவர்களை கடத்திச் கொண்டுபோய், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் அடைத்து வைத்திருப்பதும் தெரியவந்தது. அதாவது, ஒரு லாட்ஜில் அதியமானும், அமலாவும் தங்கியிருந்த நிலையில், அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் அமலாவின் மகன், மகள் மற்றும் அம்மாவும் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

போலீஸ் விசாரணை: இதையடுத்து, போலீசார் விரைந்து சென்று, அனைவரையும் மீட்டனர்.. பின்னர் அதியமானையும் கைது செய்து விசாரணை நடத்தினர்... அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுபற்றி போலீஸ் தரப்பில் சொல்லும்போது:

அதியமான் தர்மபுரி அரசு மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராக கடந்த 8 வருடங்களாக வேலை பார்த்து வருகிறார்.. இவருக்கு 2 மனைவிகள் இருக்கிறார்கள்.. முதல் மனைவி பெயர் கஸ்தூரி... ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். எனினும், நர்சிங் பயிற்சிக்கு வந்த ஜோதியை 2வது கல்யாணம் செய்து கொண்டார் அதியமான்.. இவருக்கு ஒரு மகள் உள்ளார். ஜோதி இப்போது தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்து வருகிறார்.

அமலா: இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, அமலாவின் அப்பாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.. அப்போது தன்னுடைய அப்பாவை, அமலா அருகிலிருந்து கவனித்து கொண்டார். அந்த நேரத்தில்தான், வார்டுக்கு வந்து சென்ற அதியமானுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. நாளடைவில் இதுவே தகாத உறவாக மாறியிருக்கிறது.

அரசு வேலை வாங்கி தருகிறேன், 7 லட்சம் ரூபாய் கொடு என்று கேட்டாராம் அதியமான்.. உடனே, ராணுவத்திலிருந்து கணவர் சம்பாதித்து அனுப்பும் பணத்திலிருந்து ரூ.7 லட்சத்தை அதியமானிடம் அமலா தந்துள்ளார்.. இதுபோலவே, அமலாவின் உறவினருக்கு கோர்ட்டில் வேலை வாங்கித் தருவதாக சொல்லி, அவரிடமும் ரூ.7 லட்சம் வாங்கியுள்ளார் அதியமான்.

நிர்வாண போட்டோக்கள்: ஆனால், எந்த அரசு வேலையையும் அதியமான் வாங்கி தரவில்லையாம். எனவே, கொடுத்த பணத்தை அமலா கேட்டுள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த அதியமான், பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்தபோது எடுத்த படங்கள், வீடியோக்களை, அமலாவுக்கே தெரியாமல் எடுத்த நிர்வாண போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிடுவதாக மிரட்டியிருக்கிறார்.

அதுமட்டுமல்ல, அமலா வேறொரு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், பிசிஆர் பிரிவில் வழக்கு போட வைத்துவிடுவேன் என்றும் அதியமான மிரட்டியிருக்கிறார்.

மகன், மகள்: இதனால் பயந்துபோய் யாரிடமும் சொல்லாமல் தவித்துவந்தார் அமலா. இப்படிப்பட்ட சூழலில்தான், அமலாவை கடந்த 28ம் தேதி மகன், மகளுடன் கடத்திச்சென்று திருப்பூரில் தங்க வைத்தது தெரியவந்தது. அமலாவின் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக அவரது அம்மாவையும் கடத்தி அழைத்து சென்றிருக்கிறார் அதியமான்.

அமலா மட்டுமல்லாமல், மருத்துவமனைக்கு சிகிச்சை்க்கு வரும் பல இளம்பெண்களிடம் இப்படித்தான் நெருங்கி பழகி, அரசு வேலை, கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக சொல்லி லட்சக்கணக்கான பணத்தை பறித்திருக்கிறாராம்.. பல பெண்களை ஏமாற்றி பலாத்காரமும் செய்திருக்கிறாராம் அதியமான்.

விசாரணை : இவ்வளவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, அதியமான் கைதாகி உள்ளார்.. அவரது செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது, அமலாவின் நிர்வாண படம் உட்பட, வேறுசில பெண்களின் 150க்கும் மேற்பட்ட ஆபாச படங்கள் இருந்ததாம். எப்படியும் ரூ.25 லட்சத்திற்கு மேல் பணத்தை பெண்களிடமிருந்து ஏமாற்றி பறித்திருக்கலாம் என்கிறார்கள்.

போலீஸ் காவலில் எடுத்து அதியமானை விசாரித்தால்தான், இவரால் எத்தனை பெண்கள் ஏமாந்துள்ளனர்? எத்தனை லட்சத்தை இழந்துள்ளனர் என்பது தெரியவரும். ராணுவ வீரரின் மனைவியை குடும்பத்தோடு கடத்தி அடைத்து வைத்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தர்மபுரியில் ஏற்படுத்தி வருகிறது.

அதுமட்டுமல்ல, தர்மபுரி அரசு மருத்துவமனைகளில் அவசர மற்றும் தீவிர சிகிச்சை பெறக்கூடிய நோயாளிகளின் உறவினர்களை நோட்டமிட்டு, அவர்களை குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையில் நல்ல சிகிச்சை வழங்குகிறார்கள் என்று சொல்லி, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிடுவாராம் அதியமான்.. இதை வைத்தும் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் அத்யமான் கமிஷன் தொகை பெற்று வந்திருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+