தர்மபுரி பைனாசியரின் “உல்லாச லீலைகள்” – மெமரி கார்டுகளை உடைத்த போலீசார்!

Subscribe to Oneindia Tamil

பாலக்கோடு: தர்மபுரியில் 27 பெண்களை நாசமாக்கிய பைனான்சியர் சிவராஜின் உல்லாச காட்சிகள் அடங்கிய மெமரி கார்டினை போலீசார் உடைதெரிந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் நிதி நிறுவன அதிபர் சிவராஜ்.

வட்டிக்கு பணம் வாங்க வந்த 27 பெண்களை வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்தார்.

செல்போனில் பதிவு:

அதோடு இல்லாமல் அதை தனது செல்போனில் பதிவு செய்து வைத்து ரசித்து வந்தார். செல்போன் பழுதானதால் வசமாக சிக்கி கொண்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

பலாத்கார வழக்கு:

சிவராஜ் மீது இதுவரை 4 பெண்கள் புகார் செய்து இருக்கிறார்கள். இதன் அடிப்படையில் அவர் மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இன்டர்நெட்டிலும் பரவல்:

இந்த நிலையில் சிவராஜின் ஆபாச காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இன்டர்நெட்டிலும் இந்த காட்சிகள் பரவியது. பின்னர் போலீசார் அவற்றை நீக்கி விட்டனர்.

போலீஸ் விசாரணை:

இந்த நிலையில் சிவராஜின் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட செல்போன் கடைக்காரர் முன்னா என்பவரை நேற்று போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

ஆட்டோ டிரைவர் தலைமறைவு:

சிவராஜின் நிதிநிறுவனத்துக்கு வரும் பெண்களை அவரது பண்ணை வீட்டிற்கு ஒரு ஆட்டோ டிரைவர் அழைத்து வந்து சென்று இருக்கிறார். தற்போது அவர் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

உல்லாச சிடிக்கள் விற்பனை:

கடந்த 2 நாட்களாகவே பாலக்கோடு பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கேசட் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஒரு சில கடைகள் மட்டுமே திறந்து இருக்கிறது. அந்த கடைகளில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தி சிவராஜின் உல்லாச சி.டிக்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று கண்காணித்தனர்.

மெமரி கார்ட் உடைப்பு:

இந்த நிலையில் பாலக்கோடு ரயில் நிலையம் பகுதியில் இளைஞர்கள் சிலர் தங்களது செல்போனில் சிவராஜின் உல்லாச காட்சிகளை பார்ப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களின் செல்போனில் இருந்த மெமரி கார்டை உருவி எடுத்து உடைத்து வீசினர்.

கடும் நடவடிக்கை:

மேலும் பென்டிரைவ், அல்லது சி.டி கேசட் மூலம் இதை பரப்பினாலோ, இன்டர்நெட்டில் வெளியிட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர். மேலும், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படலாம் என்றும் தெரிகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+