ரூ.10 ஆயிரத்துக்கு கறிவிருந்து + உல்லாசம்.. ஊருக்கு நடுவே ஒரே ஒரு குடிசை..அதுக்குள்ள.. நம்ம ஊர்லதான்
தருமபுரி: தருமபுரியில் தொப்பூர் அருகே நடந்துவரும் ஒரு சம்பவம், பலருக்கும் ஆச்சரியத்தை தந்து வருகிறது. இது சம்பந்தமான செய்திகள்தான் மீடியாவில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு எத்தனையோ பேர் உயிரிழந்துவிட்டனர்.. தமிழக அரசியலில் பல அதிர்வுகளைக் கிளப்பிய விவகாரம் இந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாதான்...
பலகட்ட அழுத்தங்களுக்கு பிறகு ஒருவழியாக ஒப்புதல் வழங்கியிருந்தார் தமிழக ஆளுநர் ரவி. அதைத் தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் அமலுக்கும் வந்துள்ளது..

ஆன்லைன் சூதாட்டம்: எனினும், ஆன்லைன் மட்டுமேயல்லாமல், சூதாட்டத்தில் பணத்தை வைத்து விளையாடுவோரும், அதனால் பணத்தை இழந்து, கடனாளியாகி, மன உளைச்சலுக்கு ஆளாகுவோரும் அதிகம்.. பல்வேறு உயிரிழப்புகளுக்கு இந்த சூதாட்டங்கள் அடிப்படையாக இருந்து வருகிறது. இவர்களை வைத்து, மோசடி கும்பல்கள் பல இயங்கியும் வருகின்றன.. அவர்களை கைது செய்தால்தான் ஓரளவு, சூதாட்டங்கள் கட்டுப்படும் என்கிறார்கள் பொதுமக்கள்.
இதோ தருமபுரி மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. தொப்பூர் அருகே கம்மம்பட்டி ஊராட்சிக்குட்பட்டவை சேவேரிக்கொட்டாய், சோழியானூர், மூலக்காடு பகுதிகள்.. இவைகளை சுற்றிலும், விவசாய நிலங்களும், கிராமப்புற வீடுகளும் நிறைந்திருக்கும்.. இந்த அடர்ந்த கிராமப்புற வீடுகளுக்கு நடுவில் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளதாம்..
குடில்கள்: சிமெண்ட் அட்டை குடில்கள் அமைத்துள்ளார்கள்.. இந்த குடிலில், ஒரே நேரத்தில் 100 பேர்-க்கும் மேல் உட்கார்ந்து சூதாடுவார்களாம்.. அத்துடன், மதுவிருந்து, இதைத்தொடர்ந்து கறி விருந்து நடக்குமாம்.. இது இரவும் பகலும் மாறி மாறி நடந்து கொண்டேயிருப்பதாக சொல்கிறார்கள். அதாவது, ஒருநாளைக்கு பகலும், இரவும் என 100-க்கும் மேற்பட்ட சூதாட்ட சுற்றுகள் நடக்கிறதாம். இவைகளை பகிரங்கமாகவே சூதாட்ட கும்பல் நடத்தி வருகிறது.
லட்சக்கணக்கில் பணத்தை அள்ளுகிறது. இந்த சூதாட்டத்தில் தருமபுரி, சேலம், நாமக்கல், பெங்களூர் ஆகிய பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்களாம். இவர்கள் எல்லாருமே பணக்காரர்கள்.. எல்லாருமே சூதாட்டத்துக்கு அடிமையானவர்கள்.. லட்சங்களை கொண்டுவந்து விட்டு சூதாட்டத்தில் வைத்து விளையாடுபவர்கள்.. அதே லட்சங்களை இழந்தும் வருகின்றனர்.
சண்டை: குறைந்த பட்சம் 10 ஆயிரம் ரூபாய் இருந்தால்தான், இந்த பகுதியில் காலடியே வைக்கிறார்களாம்.. ஒரு கட்டத்தில் அதிகளவு பணம் இழந்தவர்கள் மற்றும் சூதாட்ட கும்பல்களிடம் தகராறும் செய்கிறார்கள்.. அப்படி சண்டை வரும்போது, அடியாட்கள் கொண்டு பணம் இழந்தவர்களை அங்கிருந்து மிரட்டி வெளியேற்றும் சம்பவமும் அடிக்கடி நடப்பதாக தெரிகிறது.

இந்த சூதாட்டத்தால் விவசாய பணிக்கு செல்லும் பெண்கள், பள்ளி கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் மாணவிகள் என அனைவருமே பயந்து போய் உள்ளார்களாம்..
சூதாட்டம்: இதுபோன்ற தகராறுகள், கலவரங்களால், அங்குள்ள பெண்கள் எந்நேரமும் அச்ச நிலையில் இருப்பதாகவே சொல்கிறார்கள்.. பல குடும்பங்கள் சீரழிய காரணமாக உள்ள இந்த சூதாட்டத்தை தடுத்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
முக்கியமாக, அடியாட்களோடு லட்ச கணக்கில் நடக்கும் சூதாட்டத்தையும், உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகளும், குடியிருப்பு பெண்களும், மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகளும் கோரிக்கையை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விடுத்துள்ளதால், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications