• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கவுண்டமணி, விஜய்சேதுபதி படத்துடன் ட்விட்டரில் கருணாநிதியைக் கலாய்க்கும் அழகிரியின் மகன்!

By Mathi
|

சென்னை: மு.க. அழகிரி வெறுக்கத்தக்க வார்த்தைகளை பேசினார்.. ஸ்டாலின் இறந்து போய்விடுவார் எனக் கூறினார் என்று உருக்கமாக பேட்டி கொடுத்ததைத் தொடர்ந்து ட்விட்டரில் அழகிரியின் மகன் துரை தயாநிதி கருணாநிதியை எவ்வளவு உச்சமாக கலாய்க்க முடியுமோ அப்படி கலாய்த்துக் கொண்டிருக்கிறார்.

கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக மு.க. அழகிரி கடந்த 24-ந் தேதி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து நாள்தோறும் செய்தியாளர்களிடம் பேசி வரும் அழகிரி, திமுக தலைமையை விமர்சித்து குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த கருணாநிதி, அழகிரி வெறுக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தினார் என்றும் மற்றொரு மகன் மு.க. ஸ்டாலின் 3 மாதத்தில் இறந்து போய்விடுவார் என்று சொன்னதையெல்லாம் எப்படி பொறுப்பது எனவும் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கும் அழகிரி விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்

ட்விட்டரில் கலாய்க்கும் துரை தயாநிதி

ட்விட்டரில் கலாய்க்கும் துரை தயாநிதி

இந்த பஞ்சாயத்து இப்படி ஓடிக் கொண்டிருக்க தாத்தா கருணாநிதியை ட்விட்டரில் சினிமா படங்களின் துணையோடு கலாய்த்துக் கொண்டிருக்கிறார் அழகிரியின் மகன் துரை தயாநிதி.

அழகிரி நீக்கம் முதலே..

அழகிரி நீக்கம் முதலே..

மு.க. அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டது முதலே ரொம்பவுமே ஆக்டிவ்வாக ட்விட்டரில் குதித்திருக்கிறார் துரை தயாநிதி.

ச்ச்சும்ம்மா ட்ரைலர்தான்..

ச்ச்சும்ம்மா ட்ரைலர்தான்..

நேற்று மதுரைக்கு அழகிரி போய் சேர்ந்த உடன் ட்விட்டரில் அழகிரி மதுரை வந்துவிட்டார் என பதிவிட்டிருக்கிறார் தயாநிதி. அதில் ஒரு ஆதரவாளர் வந்து,, இது ச்சும்மா ட்ரைலர்தான்.. ஜனவரி 30-ல்தான் ரியல் மாஸ்னு உசுப்பேற்றிவிட்டுப் போயிருக்கிறார்.

கருணாநிதி மீது நேரடி தாக்கு

கருணாநிதி மீது நேரடி தாக்கு

இன்று கருணாநிதியின் அறிக்கை வெளியான உடனேயே, முதலில், பொய்யான குற்றச்சாட்டுகள் நீண்டகாலம் நிலைக்காது.. உண்மை ஒருநாள் கண்டிப்பாக வெளியே வரும்.. ஒரு மூத்த தலைவரிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்று நேரடியாகவே கருணாநிதியை போட்டு தாக்கி இருக்கிறார் துரை தயாநிதி.

கவுண்டமணியை முன்வைத்து..

கவுண்டமணியை முன்வைத்து..

அத்துடன் ஓய்ந்துவிடவில்லை துரை தயாநிதி.. சிறிது நேரம் கழித்து சூரியன் படத்தில் "அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா" என கவுண்டமணி பேசும் புகைப்படத்தை போட்டு, பொய்யான குற்றச்சாட்டுகள் சொன்ன பிறகு என் மனதில் இந்த காட்சிதான் நினைவுக்கு வந்தது என்று போட்டு கலாய்ச்சியிருக்கிறார்.'

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் விஜய் சேதுபதி படம் ...

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் விஜய் சேதுபதி படம் ...

இத்துடன் விட்டுவிடவில்லை துரை தயாநிதி.. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் திரைப்பட விஜய் சேதுபதி சிவாஜி செத்துட்டாரா என கேட்கும் வாசகத்துடன் ஒரு படத்தை மட்டும் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் துரை தயாநிதி..

பட்டாசு

பட்டாசு

இந்த விஜய் சேதுபதி படத்துக்கு வந்து விழுந்திருக்கும் கமெண்டுகள் ஏக ரகம்.. இதில் ஒரு ஆதரவாளர் பெயர் "பட்டாசு" அவர் பதிவிட்டிருப்பது " இத்தனை நாள் கழிச்சு சொல்றார்னா, யாராவது சொல்லச் சொல்லி வற்புறுத்தி இருப்பாங்க" என்று போட்டிருக்கிறார்.

ஆதரவும் எதிர்ப்பும்

ஆதரவும் எதிர்ப்பும்

துரை தயாநிதியின் இந்த நக்கலுக்கும் கலாய்ப்புக்கும் ட்விட்டரில் வந்து ஒருசிலர் எதிர்ப்பையும் பதிவு செய்துவிட்டும் போயிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. துரை தயாநிதியின் ட்விட்டர்.. https://twitter.com/dhayaalagiri

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Azhagiri's son Dhaya Azhagiri has taken on his grandfather and DMK chief Karunanidhi for talking to the media about what Azhagiri allegedly told him about Stalin. In a tweet, Dhaya said, "False accusations will not last long... The truth will come out soon... Definitely! I didn't expect this from such a elderly leader!"
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more