துரோக கும்பலான ஈபிஎஸ் - ஓபிஸ்க்கு ஏஜெண்டாக செயல்படும் திவாகரன்: டி.டி.வி தினகரன்
துரோகக் கும்பலான ஈபிஎஸ் - ஓபிஸ்க்கு திவாகரன் ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறார் என்று டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
சேலம் : துரோகக் கும்பலான ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணிக்கு திவாகரன் ஏஜெண்டாகச் செயல்பட்டு வருகிறார். விரைவில், இவர்களிடம் இருந்து தமிழகத்தை மீட்போம் என்று அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினரான டி.டி.வி தினகரன் இன்று சேலத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், கர்நாடகத் தேர்தல் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் மதவாத சக்திகளின் ஆதிக்கம் இனி தடுக்கப்படும்.
18 எம்.எல்.ஏ.,க்கள் விவகாரத்தில் இரு தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டுள்ளனர். அதற்கான தீர்ப்பு விரைவில் வெளியாகும். அதன் மூலம் தமிழ்நாடு தவறானவர்கள் கைகளில் இருந்து மீட்கப்படும்.
தனது முன்னாள் மாமா திவாகரனுக்கும் தனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. அவர் துரோகக் கும்பலான ஈபிஎஸ் - ஓபிஎஸ் இருவருக்கும் ஏஜெண்டாகச் செயல்படுவதாலேயே இவ்வாறு பேசி வருகிறார். இந்த தவறை அவர் விரைவில் உணர்வார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சேலத்தில் இருந்து சென்னை வரை பசுமை வழிச்சாலை அமைப்பது, எடப்பாடி பழனிசாமிக்கும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் நல்ல லாபம் தரும் என்பதாலேயே அந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications