"தல"யைக் கேட்டியாமே.. டோணிக்கு மீம்ஸ் போட்ட வங்கதேசத்தவரை வச்சு செய்யும் இந்திய ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவை வீழ்த்தி ஆசியா கோப்பையை வென்றுவிடலாம் என கனவு கண்ட வங்கதேச ரசிகர்கள், தங்கள் அணி வேகப்பந்து வீச்சாளர் டஸ்கின், கையில் டோணி தலை இருப்பது போன்று போட்டோஷாப் செய்து சமூக வலைத்தளங்களில் உலவவிட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை பைனலில், வங்கதேசத்தை பந்தாடிய இந்தியா, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றியை சுவைத்து கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

யாருடைய தலையை வைத்து போட்டோஷாப்பில் வங்கதேச ரசிகர்கள் விளையாடினார்களோ, அந்த 'தல'.. அதாங்க நம்ம டோணி, ஆறே பந்துகளில் 20 ரன்களை குவித்ததோடு, வெற்றியை தனது டிரேட் மார்க் சிக்சர் மூலம் உறுதி செய்தார்.

இதுபோதாதா, நம்ம ரசிகர்களுக்கு.. வங்கதேசத்தை மீம்ஸ்கள் போட்டு, வச்சி செய்து வருகிறார்கள்.

பாதி மொட்டை

பாதி மொட்டை

கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த இந்தியா-வங்கதேச ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது. இதையடுத்து, இந்திய முக்கிய வீரர்களின் தலையை பாதி மொட்டையடித்ததை போல ஒரு படத்தை அந்த நாட்டு ரசிகர்கள் உலவவிட்டனர்.

பதில் மொட்டை

பதில் மொட்டை

நேற்றைய ஆசிய கோப்பை இறுதி போட்டி வெற்றியின்மூலம், வங்கதேசத்துக்கு தக்க பாடம் கற்பித்த இந்திய அணியின் எழுச்சியால் மகிழ்ச்சியடைந்துள்ள ரசிகர்கள் வங்கதேச வீரர்கள் தலைகளை பாதி மொட்டையடித்து அந்த போட்டோவை சமூக வலைத்தளங்களில் உலவவிட்டுள்ளனர்.

வந்த பஸ்லயே ஏத்துறானுவளே

இந்த மீம்ஸ்சில், வடிவேலுவை ஒரு திரைப்படத்தில் பார்த்தீபன் வந்த பஸ்சிலேயே ஏறவிடுவார். அதுபோல வங்கதேசத்தை இந்தியா துவைத்தது காட்டப்பட்டுள்ளது.

எங்கடே போனீங்க..

தவான் அவுட் ஆனபோது வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு ஆக்ரோஷம் காட்டினர். அடுத்ததாக டோணி களமிறங்கியதும், மண்ணுக்குள் தலையை புகுத்திக்கொண்டனர் என்கிறது இந்த படம்.

சென்டிமென்டுல நம்மையே மிஞ்சிட்டாங்களே

சென்டிமென்ட்டில் கல்யாண் ஜுவல்லர்ஸ் விளம்பரத்தை வென்றுவிட்டனர் வங்கதேச பெண் ரசிகைகள் என்கிறது இந்த டிவிட். பின்ன என்ன, எதோ தோல்வியையே பார்க்காத அணி மாதிரி என்னா சோகம் வங்கதேச ரசிகர்களுக்கு.

கதற, கதற

போட்டோ ஷாப்பில் டோணி தலையை வெட்டி வைத்ததை போல வங்கதேச ரசிகர்கள் போட்டோ உருவாக்கியிருந்தனர். ஆனால், உண்மையிலேயே டோணி அடித்த அடியில், ஸ்டேடியத்தில் இருந்த வங்கதேச ரசிகர்கள்தான் கதறி அழுதனர். அப்படி கதறிய ஒரு ரசிகரின் போட்டோவை பாருங்கள்.

கண்ணு வேணும்னு கேட்டியாமே

வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில், கமல் கதாப்பாத்திரத்தின் கண் வேண்டும் என்று வில்லன் கதாப்பாத்திரம் அடியாட்களுக்கு கட்டளையிடும். ஆனால் கமல், வில்லன் வீட்டுக்கே வந்து, என் கண் வேணும்னு கேட்டியாமே, எடுத்துக்கோ.. என கண்ணை காட்டுவது போல சீன் இருக்கும். இப்போது முடிஞ்சா தலையை எடு என டோணி கூறுவதை போல உள்ளது இந்த மீம்ஸ்.

நான்தான் அப்பவே சொன்னேன்ல

கிட்னி எடுபட்ட கேரக்டர், வடிவேலு கேரக்டரிடம், எச்சரிக்கைவிடுக்கும். இருப்பினும், வடிவேலு கதாப்பாத்திரம் கிட்னியை இழந்துவிட்டு வரும். அந்த பட சீனை, ஆசிய கோப்பை பைனலுக்கு ஒப்பிட்டுள்ளது இந்த டிவிட்.

நீங்கெல்லாம் நாய்க்குட்டிங்க மாதிரி

டோணி தலையை கையில் வைத்திருப்பது போல மீம்ஸ் போட்டிருந்தனர். ஆனால் டோணியோ, வங்கதேச அணியையே தனது கையில் நாய்க்குட்டி போல தூக்கி வைத்துக்கொண்டார்.

தலைக்கே விபூதி அடிக்க பார்த்தல்ல

டோணி தலையை கையில் தூக்கலாம் என நினைத்த வங்கதேசம், சட்டியை தலையில் கவிழ்த்திக்கொண்ட சிறுவனுக்கு ஒப்பானது என்கிறது இந்த டிவிட்.

அடிச்சாங்க பாரு மொட்டை

இந்த அடிச்சிட்டாங்கல்ல, வங்கதேசத்துக்கு நம்ம ஆட்கள் மொட்டையை.. பழிக்கு பழி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+