அதிமுக வேட்பாளர்களில் பல பேர் சசிகலா ஆட்களாமே?
சென்னை: அதிமுக வேட்பாளர்களில் பலர் சசிகலா ஆதரவாளர்கள் என்று அதிமுகவினர் மத்தியில் கிசுகிசுப்பு கிளம்பியுள்ளது. சசிகலா மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினர் பலரும் வேட்பாளர் தேர்வில் ஆதிக்கம் செலுத்தியுள்ளதாகவும், இதனால் உண்மையான அதிமுகவினர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுகவினர் மத்தியில் புலம்பல் காணப்படுகிறது.
பெரும் பெரும் மனிதர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள், சாதகமானவர்களுக்கு சசிகலா மூலமாக சீட் வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் அதிமுகவினர் புலம்புகின்றனர்.
இந்த தலையீடு காரணமாக ஜெயலலிதாவுக்கு வேண்டப்பட்ட பலருக்கும், உண்மையான அதிமுக விசுவாசிகளுக்கும் சீட் கிடைக்காமல் போய் விட்டதாகவும் பேசப்படுகிறது.

தென் மாவட்டங்கள்
சசிகலாவின் ஆதிக்கம் தென் மாவட்டங்களில்தான் அதிகமாக உள்ளதாம். தென் மாவட்ட வேட்பாளர்களில் பலரும் சசிகலா மூலமாக சீட் பெற்றவர்கள் என்று சொல்கிறார்கள்.

அந்த 5 பேர்
சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த மொத்தம் 5 பேர் கை காட்டியவர்கள்தான் வேட்பாளர்களாகியுள்ளனராம். இவர்களின் ஆசி பெற்றவர்கள்தான் பெரும்பாலான வேட்பாளர்கள் என்றும் சொல்கிறார்கள்.

எளிதில் கண்டுபிடிக்க முடியாத வண்ணம்
இவர்கள் சசிகலா ஆதரவாளர்கள் என்று எளிதிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் திறமையாக செயல்பட்டு தங்களது ஆட்களை வேட்பாளர்களாக்கியுள்ளது சசி குருப் என்கிறார்கள்.

'மணல்' தொடர்பு
தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய மணல் புள்ளி மூலம் சிலருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளதாம். இது அவரது மாவட்டத்தில் உள்ள அதிமுகவினர் மத்தியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக சொல்கிறார்கள். இந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியினர் செயல்பட மாட்டார்கள் என்றும் பேச்சு அடிபடுகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications