காலில் விழுங்கம்மா.. விஜய் வரும் போது.. கள்ளக்குறிச்சி பெண்ணை காலில் விழ சொன்னார்களா? ஷாக் வீடியோ!

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடிகர் விஜய் மக்களை பார்க்க சென்ற போது அவரின் காலில் விழும்படி பெண் ஒருவரிடம் தவெக நிர்வாகி கூறியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்து உள்ளது. இதில் ஏற்கனவே சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

tamizhaga vetri kazhagam vijay kallakurichi mk stalin illicit liquor

விஜய் கண்டனம்; கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.

இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்., என்று குறிப்பிட்டு உள்ளார். முதல்முறையாக வாழ்த்து சொல்வதை நிறுத்திவிட்டு.. கோபமாக விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பார்வையிட்ட விஜய்: கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சியில் சிகிச்சை பெற்று வருவோரை நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை உள்பட பிற மருத்துவமனைகளில் சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பலி ஏற்பட்டு வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

tamizhaga vetri kazhagam vijay kallakurichi mk stalin illicit liquor

இந்த வேளையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவரை காப்பாத்துங்க சார் என பெண் ஒருவர் நடிகர் விஜயின் காலில் விழுந்து கதறி அழுத நிலையில் அவர் கண்கலங்கினார்.

உண்மை என்ன? மருத்துவமனையில் நடிகர் விஜய் மக்களை பார்க்க சென்ற போது அவரின் காலில் விழும்படி பெண் ஒருவரிடம் தவெக நிர்வாகி கூறியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவர் அந்த பெண்ணிடம் காலில் விழுங்க என்று சொன்னதாக வீடியோ டிரெண்டாகி வருகிறது. இப்படி ஒரு கருத்து வைக்கப்பட்டாலும் வேறு ஒரு கருத்தும் வைக்கப்படுகிறது.

அதன்படி.. அந்த பெண்ணிடம் அங்கேபாருங்க.. விஜய் வருகிறார் என்றும் கூட சொல்லப்பட்டு இருக்கலாம். காலில் விழும்படிதான் சொல்லி இருக்க வேண்டும் என்று இல்லை. ஆடியோ கேட்கவில்லை. அப்படி இருக்க விஜய் மீது குற்றச்சாட்டு வைக்க கூடாது. வெறுமனே விஜய் வருகிறார் பாருங்க என்றும் கூட சொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் வாதம் வைக்கப்படுகிறது.

எது உண்மையோ.. விஜய் அங்கே வந்தது அரசியல் ரீதியாக அவரின் முதல் பெரிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. அரசியல் ரீதியாக திமுகவிற்கு இந்த விவகாரம் கண்டிப்பாக அழுத்தத்தை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+