அடுக்குமாடிக் குடியிருப்பில் பெரும்பாலான வீடுகளை வாங்கியவர்கள் திரைத்துறையினர்?
Subscribe to Oneindia Tamil
சென்னை: இடிந்து விழுந்த மவுலிவாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பில் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவிலான வீடுகளை வாங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் அனைத்து வீடுகளுமே அதி நவீன வசதிகளுடன் கூடியதாக வீடுகள் கட்டப்பட்டு வந்ததாம்.
அனைத்து உள் வசதிகளுடன் கூடியதாக இந்த வீடுகள் கட்டப்பட்டு வந்தன. மொத்தப் பணத்தையும் வாங்கியோரிடம் பில்டர்கள் வாங்கி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

வருகிற ஆயுத பூஜையின்போது வீடுகளை ஒப்படைக்கும் வகையில் பணிகள் வேகமாக நடந்து வந்துள்ளன.
பெரும்பாலான வீடுகளை திரைத்துறையினரே வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் யாரெல்லாம் வாங்கியுள்ளனர் என்ற பட்டியல் இதுவரை வெளியாகவில்லை.
ஏன் வீடுகளை வாங்கியவர்கள் யார் யார் என்ற விவரம் இதுவரை தெரிவிக்கப்படாமல் உள்ளது என்பதும் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications