7 + 13 + 20 சீட்.. எடப்பாடியே எதிர்பார்க்கல.. தலைகீழா மாறுதே.. பாஜக எடுத்த அஸ்திரம்.. யாரு சசிகலாவா?
சென்னை: ஒருங்கிணைந்த அதிமுகவுக்காக பாஜக மேலிடம் முயற்சிப்பதாக தெரிகிறது. அதிமுக விவகாரங்களில் தலையிடப்போவதில்லை என்று பாஜக தரப்பில் சொல்லிவிட்ட போதிலும்கூட, திரைமறைவு அரசியல் சூடுபிடித்து வருவதாக தெரிகிறது.
விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. திமுக கூட்டணியை பொறுத்தவரை ஏற்கனவே பலம் வாய்ந்து காணப்படுகிறது.. இதில் இன்னும் சில கட்சிகள் கூட்டணிக்குள் இணையலாம் என்கிறார்கள். ஆனால், அது எந்த கட்சி என்று இதுவரை தெரியவில்லை.
ஆனால், மெகா கூட்டணியை அமைத்து போட்டியிடுவோம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து பல மாதங்கள் ஆகின்றன.. இன்னும் கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்று உறுதியாக தெரியவில்லை...

இப்போதைக்கு அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளது.. ஆனால் மேலிடத்தில் இருந்து மட்டுமே இந்த உறுதி வெளிப்படுத்தப்பட்டுள்ளதே தவிர, மாநில அளவில் வெளிப்படையாக யாரும் பேசவில்லை.. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி + அண்ணாமலை இருவரின் மோதல் போக்கும் இப்போது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை..
கிளம்பிய புகார்கள்: இனி இணக்கமாக செயல்படுவோம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் இரு தரப்புமே உறுதி தெரிவித்துவிட்டு வந்தபிறகும்கூட, இதுவரை இந்த தலைவர்கள், பரஸ்பரம் ஒன்றிணையவில்லை என்றே தெரிகிறது.. அது சம்பந்தமான பேட்டிகளைகளையும் தரவில்லை. போதாக்குறைக்கு, ஆளுக்கு ஒருபக்கம் கவர்னரை சந்தித்து திமுக மீது புகார் மனுவை வாசித்து வருவதால், அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பமே நீடித்து வருவதாக தெரிகிறது.
அதேபோல, ஓபிஎஸ் + டிடிவி தினகரனை எந்த காலத்திலும் கட்சிக்குள் இணைய வாய்ப்பே கிடையாது என்று எடப்பாடி உறுதியாக சொல்லி வருகிறார்.. இந்த விஷயத்தில் அவரது பிடிவாதமும் தளரவில்லை.. அதிமுகவின் வாக்குகளை நம்பியே, கூட்டணிக்குள் களமிறங்கும் பாஜக, இனி "ஒருங்கிணைந்த அதிமுக" விஷயத்தில், என்ன செய்ய போகிறது? என்ற கேள்வியும் எழுந்தபடியே உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு ஒரு தகவல் வட்டமடித்தது.. அதாவது, மொத்தமுள்ள 40 தொகுதிகளில் சரிபாதியாக 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிட வேண்டும், மீதமுள்ள 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும், அப்படி ஒதுக்கப்படும் 20 தொகுதிகளை, தங்களுக்குள் பிரித்துக் கொள்வது என தமிழக பாஜக தலைவர்கள், அதிமுகவிடம் வலியுறுத்தியிருக்கிறார்களாம்.

20 - 20 சாத்தியமா: அந்த 20 தொகுதிகளில், 13 தொகுதிகளில் தங்களது வேட்பாளர்களை நிறுத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள்.. மற்ற 7 தொகுதிகளை, ஓபிஎஸ் அணி + அமமுக டிடிவி தினகரன், தமாகா ஜிகே வாசன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர் போன்றோருக்குதான் அந்த தொகுதிகளை வழங்க பாஜக கணக்கு போட்டுள்ளதாக தெரிகிறது.
இதில், ஓபிஎஸ் அணிக்கு மட்டும் 2 இடங்கள் கொடுக்க போவதாக பேசி வருகிறார்களாம்.. அதில் ஒரு தொகுதியில் ரவீந்திரநாத்தை நிறுத்தவும் ஏற்பாடுகள் நடப்பதாக சொல்கிறார்கள்..
அதுமட்டுமல்ல, ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்பட கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் அனைத்தையும் பாஜகவின் தாமரை சின்னத்திலேயே போட்டியிட வைக்கவும் வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. முக்கியமாக ரவீந்திரநாத்தை இழக்க பாஜகவுக்கு மனதில்லையாம்.. ஆனால், இதற்கெல்லாம் எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்வாரா? முக்கியமாக, ரவீந்திரநாத் தரப்பு வெற்றியடைய அதிமுகவில் வேலை பார்ப்பார்களா? என்ற சந்தேகமும் கிளம்பிஉள்ளது.
எடப்பாடி பழனிசாமி : இப்படிப்பட்ட சூழலில்தான், சசிகலாவும் சில முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறாராம்.. கடந்த 2 வருடமாகவே அதிமுகவை கைப்பற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் சசிகலா.. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் தரப்பில் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்தும், போதுமான பலன் கிடைக்கவில்லை.. எடப்பாடியின் பிடிவாதத்தையும் தளர்த்த முடியவில்லை.. கட்சியையும் தன்வசப்படுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சியும் உயர்ந்து கொண்டே போவது சசிகலாவை அதிர வைத்தபடி இருந்தது..
சட்டரீதியான தீர்வு ஓபிஎஸ்ஸூக்கு கிடைக்கும் என்று பார்த்தால் அதிலும் தோல்வி கிடைத்து கொண்டே இருப்பதும் சசிகலாவுக்கு அதிர்ச்சியை தந்ததாக சொன்னார்கள். இதையடுத்துதான், பாஜக தலைவர்கள் துணையுடன் அதிமுகவில் மறுபடியும் சேர்ந்துவிடலாம் என்று கணக்கு போட்டுள்ளாராம்..

அமித்ஷா வியூகம்: சமீபத்தில், கர்நாடகா பிரச்சாரத்துக்காக அமித்ஷா வந்திருந்தபோது, அவரை ரகசியமாக சந்தித்து பேசினாராம் சசிகலா.. இந்த சந்திப்பின்போது அமித்ஷாவிடம் சசிகலா நிறைய விஷயங்களை குறிப்பிட்டு பேசியிருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒன்றுதான், ஓபிஎஸ் - தினகரன் இருவரும் சேர்ந்து நடத்திய சந்திப்பு என்கிறார்கள்.. இப்போது அடுத்தக்கட்டமாக, அதிமுகவில் மேலும் சில அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என்கிறார்கள்.. முக்கியமாக, பிரிந்தவர்களை ஒன்றிணைக்கும்படியான அசைன்மென்ட்டை மேலிடம் பிறப்பித்துள்ளதாக தெரிகிறது..
இதனிடையே சசிகலாவும், பாஜக அதிமுக கூட்டணி வெற்றியை நோக்கியே தன்னுடைய வியூகங்களை வகுத்து வருகிறாராம்.. வெளிப்படையாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தராவிட்டாலும்கூட, திமுகவை வீழ்த்தி, அதிமுகவின் வெற்றியே முக்கியம் என்ற வகையில்தான் அவரது பிரச்சாரமும் இருக்க போகிறதாம்.. சசிகலா தனக்கு எப்படியும் ஆதரவு தந்துவிடுவார் என்று ஓபிஎஸ் பெரிதும் நம்பி உள்ள நிலையில், சசிகலா இந்த விஷயத்தில் மாறுபட போகிறாராம்.
சசிகலா மாற்றம்: ஓபிஎஸ்ஸுக்கு மட்டுமே ஆதரவை தந்துவிட்டால், இதுவரை ஒருங்கிணைந்த அதிமுக மட்டுமே தேவை என்று இத்தனை காலமும் சசிகலா வலியுறுத்தி வந்த கருத்து வலுவிழந்து விடும்.. மேலும், 'சாதி முத்திரை' குத்தப்பட்டுவிடும்.. அதனாலேயே பொதுவான அதிமுக - பாஜக கூட்டணி வெற்றிக்காக பாடுபட போவதாக, சசிகலா தரப்பு முடிவெடுத்துள்ளதாம்.. ஆனால், எடப்பாடி பழனிசாமி என்னதான் செய்ய போகிறார் என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications