கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையேயான ' 4' வித்தியாசங்கள்: கனிமொழி விளக்கம்
சிதம்பரம்: திமுக தலைவர் கருணாநிதிக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையேயான 4 வித்தியாசங்களை திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திமுக சார்பில் கே.ஆர். செந்தில்குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி சிதம்பரத்தில் செந்தில்குமாருக்காக வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,

கருணாநிதி
கருணாநிதி தான் சொன்னதை செய்தார், செய்ததை சொன்னார். ஆனால் ஜெயலலிதாவோ செய்வீர்களா செய்வீர்களா என்று கேட்டுவிட்டு ஆட்சிக்கு வந்த பிறகு ஒன்றும் செய்யவில்லை.

சந்திப்பு
அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என யாரையும் கடந்த 5 ஆண்டுகளில் சந்திக்காதவர் ஜெயலலிதா. ஆனால் மக்களால் எளிதில் சந்திக்கக்கூடிய முதல்வராக இருந்தவர் கருணாநிதி. ஜெயலலிதா கோட்டைக்கு வருவதே தேர் திருவிழா போன்றது. கருணாநிதி அப்படி இல்லை.

ஜெயலலிதா
ஜெயலலிதா வெய்யிலின் கொடுமை தெரியாமல் ஏசியில் அமர்ந்து பேசுகிறார். ஆனால் அவர் கூட்டத்திற்காக மதியம் 2, 3 மணிக்கெல்லாம் மக்களை மைதானத்திற்கு அழைத்து வந்து சாகடிக்கிறார்கள். கருணாநிதி மக்கள் இருக்கும் இடத்திற்கே செல்கிறார்.

திமுக தேர்தல் அறிக்கை
திமுக தேர்தல் அறிக்கையை கருணாநிதி தயாரிக்கவில்லை. அதை மக்களுக்காக மக்கள் தயாரித்துள்ளனர். மின் கட்டணம், பேருந்து கட்டணம் மற்றும் பால் விலையை உயர்த்தியவர் ஜெயலலிதா. அவர் மக்களுக்கு தரமற்ற பொருட்களை அளித்து அவர்களை ஏமாற்றியுள்ளார்.

மதுவிலக்கு
பெண்கள் மதுக்கடைகளை மூடுமாறு வலியுறுத்தி வருகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த உடன் முதல் கையெழுத்து மதுவிலக்கில் தான். திமுக ஆட்சிக்கு வந்தால் அண்ணாமலை பல்கலைக்கழக பிரச்சனைகளை தீர்த்து வைப்போம். பிச்சாவரம், சிதம்பரத்தை சுற்றுலா மையங்களாக ஆக்குவோம்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications