செங்கல்பட்டு மகாலட்சுமி நகரில் வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை மீட்பதில் சிக்கல்!
செங்கல்பட்டு: வெள்ளநீர் தொடர்ந்து அதிகரித்து வருவதால் செங்கல்பட்டு மகாலட்சுமி நகரில் சிக்கியுள்ள 50-க்கும் மேற்பட்டோரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தீவிரமாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழை காரணமாக ஏராளமான குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது வரையி்ல் பேய் மழைக்கு 113 பேர் பலியாகி உள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர் மழையால் நேற்று ஒரே நாளில் கடலூர் மாவட்டத்தில் 7 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், செங்கல்பட்டு பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக ஜெ.சி.கே.நகர், குறிஞ்சி தெரு, தென்றல் தெரு, தாழம்பூர் தெரு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் 500 வீடுகளை வெள்ளத்தில் தத்தளித்து வந்தன.
தொடர்ந்து கொட்டித் தீர்த்துவரும் கனமழையின் காரணமாக செங்கல்பட்டு மகாலட்சுமி நகரில் 250 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து மீட்புக் குழுவினர் படகுகள் உதவியுடன் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 213 பேரை பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதனிடையே வெள்ளநீர் தொடர்ந்து அதிகரித்து வருவதால் படகுகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மேலும் 50 க்கும் அதிகமானோரை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications