கூவத்தூர் சீசன் 2.. ஓவர் டூ புதுவை.. விண்ட் ப்ளவர் ரிசார்ட்டில் டிடிவி குரூப்பின் 19 எம்.எல்.ஏக்கள்
தினகரன் எம்.எல்.ஏக்கள் புதுச்சேரியில் உள்ள கூவத்தூரை மிஞ்சும் பிரமாண்டமான விண்ட் ப்ளவர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்படுகின்றனர்.
புதுச்சேரி: தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி தரப்புக்கு தாவாமல் இருக்க புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள விண்ட் ப்ளவர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்படுகின்றனர்.
அதிமுக அணிகள் இணைப்பில் கடுப்பாகிப் போன தினகரன் தரப்பு எடப்பாடி தலைமையிலான ஆட்சிக்ப்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது. முதல் கட்டமாக தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்தித்து முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என கடிதம் கொடுத்தனர்.

பெரும்பான்மை இல்லை
இதனால் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. இதையடுத்து தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்களை கூவத்தூர் ரிசார்ட் ஸ்டைலில் புதுவைக்கு அனுப்பி வைத்துள்ளது.

புதுக்குப்பம் ரிசார்ட்
முதலில் புதுச்சேரியின் புதுக்குப்பம் பகுதியில் உள்ள மிரட்டலான ரிசார்ட்டில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டது. அதேநேரத்தில் மற்றொரு ஹோட்டலும் புக் செய்யப்பட்டது.

திடீர் குழப்பம்
ஒரு கட்டத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் புதுவையில் இருந்து திரும்பி வேறு ஒரு மாநிலத்துக்கு செல்லலாம் எனவும் கூறப்பட்டது. கடைசியாக புதுவை அரியாங்குப்பம் பகுதியில் உள்ள விண்ட் ப்ளவர் என்ற மிக பிரமாண்ட ரிசார்ட்டில் அனைவரும் தங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அடேங்கப்பா! பிரமாண்டம்
தற்போது தினகரன் எம்.எல்.ஏக்கள் தங்கும் ரிசார்ட் மிக பிரமாண்டமானது. கூவத்தூரை விட பிரமாண்டமானதாக அத்தனை சொகுசு அம்சங்களுடன் இருக்கிறது இந்த ரிசார்ட்.












Click it and Unblock the Notifications