புதுவையில் 17 நாட்கள் முகாமிட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்- வாடகை மட்டும் ரூ 30,40,000
புதுவையில் 17 நாட்கள் முகாமிட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ரிசார்ட், ஹோட்டல்களுக்கு வாடகை மட்டும் ரூ30 லட்சம் என தகவல்கள் வெளியாகி உள்ளன
புதுவை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி புதுவையில் 17 நாட்கள் முகாமிட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ரிசார்ட், ஹோட்டல்களுக்கு வாடகை மட்டும் ரூ.30,40,000 என தெரியவந்துள்ளது.
முதல்வர் எடப்பாடிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தனித்தனியே கடிதம் கொடுத்தனர். இந்த கடிதம் கொடுத்த கையோடு புதுவை விண்ட் ப்ளவர் சொகுசு விடுதியில் முதலில் முகாமிட்டனர்.
பின்னர் சன்வே மேனா ஹோட்டலில் சில நாட்கள் தங்கினர். இதைத் தொடர்ந்து மீண்டும் விண்ட் ப்ளவர் ரிசார்ட்டுக்கே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் திரும்பினர்.

மைசூரில் டேரா
தற்போது புதுவையில் இருந்து மைசூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள். மொத்தம் 17 நாட்கள் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் புதுவையில் தங்கியிருந்தனர்.

விண்ட் ப்ளவர் ரிசார்ட்
கடந்த மாதம் 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை விண்ட் ப்ளவர் சொகுசு ரிசார்ட்டில் முதலில் தங்கினர். இந்த 4 நாட்களுக்கான வாடகை மட்டும் ரூ5 லட்சமாம்.

சன்வே மேனார்
பின்னர் 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை சன்வே மேனார் ஹோட்டலுக்கு மாறினர். அங்கு 3 நாட்களுக்கு மட்டும் ரூ7 லட்சம் வாடகையாம்.

ரூ.30,40,000
பின்னர் 27-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை விண்ட் ப்ளவர் ரிசார்ட்டிலேயே டேரா அடித்தனர். இதற்கான வாடகை ரூ18,40,000. ஆக மொத்தம் 17 நாட்களுக்கான வாடகை செலவு மட்டுமே ரூ.30,40,000 என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications