பாஜக எதிர்ப்பு அரசியலை முன்வைத்து தனிக்கட்சி தொடங்கும் தினகரன்... திமுகவுக்கு 'செக்'
அதிமுக-பாஜக எதிர்ப்பு அரசியலை முன்வைத்தே தனிக்கட்சியை நடத்த இருக்கிறாராம் தினகரன்.
Recommended Video

சென்னை: அதிமுக-பாஜக எதிர்ப்பு அரசியலை முன்வைத்தே தனிக்கட்சியை நடத்த இருக்கிறாராம் தினகரன். இது திமுகவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவை பாஜக கைப்பற்றியது. இதைத் தடுத்து வியூகம் வகுத்து திமுக செயல்படும் என மக்கள் எதிர்பார்த்தனர்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் இதை பல முறை பொதுக்கூட்டங்களில் கூறியிருந்தார். ஆனால் ஓராண்டாகிவிட்ட நிலையிலும் கூட திமுக, அதிமுக- பாஜக எதிர்ப்பில் வலிமையாக இல்லை என்கிற அதிருப்தி நிலவுகிறது.,

தினகரன் வியூகம்
இந்த அதிருப்திதான் ஆர்கே நகரில் திமுகவை டெபாசிட் இழக்க வைத்தது. அதே நேரத்தில் திமுக தயங்கி வரும் இந்த அதிமுக- பாஜக எதிர்ப்பு அரசியலின் முகமாக தினகரன் தம்மை மாற்றிக் கொண்டார். அவரது ஆர்கே நகர் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்.

பம்முகிறது திமுக?
தாம் அரசியலில் இருக்கும் வரை ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என திட்டவட்டமாக தினகரன் அறிவித்துள்ளார். அதேநேரத்தில் பாஜகவிடம் திமுக ஒருவித மென்மைப் போக்கை கடைபிடிக்கிறது என்பது அக்கட்சியினர் ஆதங்கம்.

திமுக தலைமை மவுனம்
திமுகவின் 2-ம் கட்ட தலைவர்களை ரஜினிகாந்த் பக்கம் தள்ளிவிடுவதற்கான பேச்சுவார்த்தைகளை டெல்லி மேற்கொள்கிறது என்பது அக்கட்சித் தலைமைக்கு தெரிந்தும். ஆனாலும் பாஜக எதிர்ப்பு விஷயத்தில் அடக்கியே திமுக தலைமை வாசிப்பதுதான் இந்த ஆதங்கத்தின் பின்னணி.

எதிர்ப்பு அரசியல் சரி
இந்நிலையில் அதிமுக மற்றும் பாஜக எதிர்ப்பு அரசியல் தமக்கு கை கொடுக்கும் என்பது தினகரனின் கணக்கு. இதைத்தான் அண்மையில் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த போதும் தினகரன் கூறியுள்ளார். ஆனால் சசிகலாவோ அதிமுகவை எப்படியும் கைப்பற்ற வேண்டும்.. அதைவிட்டு தனிக்கட்சி தொடங்கினால் எப்படி? என கேட்டிருக்கிறார்.

காலம் பதில் சொல்லும்
தினகரனோ, பதவிக்காக அங்கே சில காலம் இருப்பார்கள். ஆட்சி முடிந்த பின்னர் நிச்சயம் நம்மிடம்தான் வருவார்கள். அவர்களுக்கு நம்மால்தான் ஏதேனும் செய்ய முடியும் என்பது நன்றாக தெரியும் என சமாதானப்படுத்தியிருக்கிறார். தனிக்கட்சி தொடங்கும் தினகரன் தொடர்ந்து அதிமுக- பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருப்பாரா? இல்லையா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications