குடகு மாவட்டத்திற்கு ஷிப்ட்டான தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்.. ரகசிய இடத்தில் தங்க வைப்பு
பெங்களூர்: குடகு மாவட்ட ரிசார்ட்டில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுச்சேரியில் இருந்து மைசூர் சென்ற தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பின்னர் அங்கிருந்து, சுமார் 120 கி.மீ தொலைவிலுள்ள குடகு மாவட்டத்திலுள்ள ரிசார்ட்டுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் எந்த ரிசார்ட்டில் உள்ளனர் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்களின் தொலைபேசி எண்களுக்கு நிருபர்கள் போன் செய்தால் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளதாக பதில் கிடைக்கிறது. ஆனால் செல்போன் நிறுவனத்தின் குரல் கன்னட மொழியில் உள்ளது. எனவே அவர்கள் கர்நாடகாவிற்குள்தான் உள்ளனர் என்பது தெரிகிறது.

ரகசியம்
புதுச்சேரி ரிசார்ட்டில் இருந்தபோது எம்எல்ஏக்கள் சுதந்திரமாக விடப்பட்டனர். ஊஞ்சல் ஆடுவது, வாக்கிங் செல்வது என மீடியாக்கள் கண்களில் தொடர்ச்சியாக தென்பட்டனர். இஷ்டத்திற்கு பேட்டிகள் கொடுத்தனர். ஆனால் இப்போது ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

கூவத்தூர் நிலை
கூவத்தூரில் உள்ள நிலைதான் இப்போது குடகிலும் காணப்படுகிறது என்பதை ஊர்ஜிதமாகியுள்ளது. ஜக்கையன் எம்எல்ஏ திடீரென எடப்பாடி தரப்புக்கு ஆதரவாக கிளம்பிவிட்டார். அதேபோல மேலும் சிலரும் கிளம்பலாம் என்ற எச்சரிக்கையால் இப்படி ரகசியம் காக்கப்படுவதாக தினகரன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பத்திரிகையாளர்கள் தேடுதல்
சுற்றுலா தலமான குடகிலுள்ள அனைத்து ரிசார்டுகளையும் சல்லடை போட்டு தமிழ் மற்றும் கன்னட பத்திரிகையாளர்கள் தேடி வருகிறார்கள். இன்னும் கூட எம்எல்ஏக்கள் குறித்து துப்பு கிடைக்கவில்லை. விரைந்து கண்டுபிடித்துவிடுவோம் என களத்திலுள்ள நிருபர்கள் நம்மிடம் நம்பிக்கை தெரிவித்தார்கள்.

போலீசார் குவிப்பு
குடகில் தினகரனின் நண்பருக்கு சொந்தமான ரிசார்டுகள் இருப்பதாகவும் அதில் ஒன்றில்தான் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சில ரிசார்டுகளில் மட்டும் அதிகப்படியாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த ரிசார்ட்டுகளில்தான் எம்எல்ஏக்கள் இருக்க கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications