ஆர்.கே.நகரில் நாம் தமிழருக்கு 3வது இடம்.. அடுத்த இடம்தான் தினகரனுக்கு - ஒன்இந்தியா வாசகர்கள் அதிரடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே.நகரில் தினகரன் பெரும் படு தோல்வியையே சந்திப்பார் என்று நாளுக்கு நாள் உறுதியாகி வருகிறது. ஒன்இந்தியா தமிழ் வாசகர்களின் கருத்துக் கணிப்பில் தினகரனுக்கு 4வது இடமே கிடைத்துள்ளது.

நமது வாசகர்களின் கருத்துப்படி மதுசூதன் வெற்றி பெறுவார் என்றும். 2வது இடத்தை திமுக பிடிக்கலாம் என்றும் தெரிகிறது. அதேசமயம், 3வது இடத்தை நாம் தமிழர் பிடிக்கும் என பரவலான வாசகர்கள் தெரிவித்துள்ளனர்.

4வது இடமே தினகரனுக்குக் கிடைக்கும் என்றும் அவரை விட கீழான நிலையில்தான் பாஜக, தீபா பேரவை உள்ளிட்டவை வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

இது இரட்டை இலை சின்ன முடக்கத்திற்கு முன்பு கேட்கப்பட்ட கேள்வியாகும். எனவே தினகரனின் நிலை தற்போது மேலும் மோசமடையவும் வாய்ப்பு அதிகம் என்பதை மறுக்க முடியாது.

ஆர்..கே.நகரில் யார் வெல்லக் கூடும்?

ஆர்..கே.நகரில் யார் வெல்லக் கூடும்?

ஆர்.கே.நகரில் யார் வெல்லக் கூடும் என்ற கேள்வியை நமது வாசகர்களிடம் கேட்டிருந்தோம். இதில் மதுசூதனன், திமுகவின் மருதுகணேஷ், தினகரன், பாஜகவின் கங்கை அமரன், தீபா, நாம் தமிழர் கலைக்கோட்டுதயம், மார்க்சிஸ்ட் வேட்பாளர் லோகநாதன், தேமுதிக வேட்பாளர் மதிவாணன் ஆகிய முக்கிய 8 கட்சி வேட்பாளர்களையும் கேட்டிருந்தோம்.

நம்பர் 1 மதுசூதனன்

நம்பர் 1 மதுசூதனன்

இதில் அதிக வாசகர்களின் ஆதரவை மதுசூதனன் பெற்றுள்ளார். அவருக்கு பதிவான வாக்குகளில் 39.19 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது 11,061 வாக்குகளை பெற்றுள்ளார்.

2வது இடத்தில் திமுக

2வது இடத்தில் திமுக

திமுக வேட்பாளர் மருது கணேஷ் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். அவருக்குக் கிடைத்துள்ள வாக்குகள் 31.41 சதவீதமாகும். அதாவது 8867 வாக்குகள் இவருக்குக் கிடைத்துள்ளது.

3வது இடத்தில் நாம் தமிழர்

3வது இடத்தில் நாம் தமிழர்

இதில் 3வது இடத்தில் நாம் தமிழர் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் வருகிறார். இவருக்கு 5.25 சதவீத வாக்குகள், அதாவது 1482 வாக்குகள் கிடைத்துள்ளன.

4வது இடத்தில் தினகரன்

4வது இடத்தில் தினகரன்

அதிமுக அம்மா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் தினகரன் 4வது இடத்தில் இருக்கிறார். இவருக்கு 1185 வாக்குகள் கிடைத்துள்ளன.

5வது இடத்தில் கங்கை அமரன்

5வது இடத்தில் கங்கை அமரன்

பாஜகவின் கங்கை அமரனுக்கு 5வது இடம்தான். அவருக்கு 929 பேர்தான் வாக்களித்துள்ளனர். அதாவது 3.29 சதவீத வாக்குகள் மட்டுமே பாஜகவுக்கு கிடைத்துள்ளது.

6வது இடத்தில் தீபா

6வது இடத்தில் தீபா

பெரும் எதிர்பார்ப்பும், பில்ட்டபும் கொடுக்கப்பட்டு வரும் தீபாவுக்கு நமது வாசகர்கள் மத்தியில் 6வது இடமே கிடைத்துள்ளது. அதாவது 1.31 சதவீத வாக்குகளே அவருக்குக் கிடைத்துள்ளன.

7வது இடத்தில் மார்க்சிஸ்ட் கட்சி

7வது இடத்தில் மார்க்சிஸ்ட் கட்சி

மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் லோகநாதனுக்குக் கிடைத்துள்ள இடம் 7வது இடமாகும். அவருக்கு 0.72 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.

யாருமே வேண்டாம்

யாருமே வேண்டாம்

இவர்கள் யாருமே வெல்லக் கூடாது என்றும் கணிசமானவர்கள் வாக்களித்துள்ளனர். அதாவது 13.36 சதவீதம் பேர் அனைவர் மீதும் காட்டமாக உள்ளனர். கிட்டத்தட்ட நோட்டா மாதிரி இவர்களது வாக்குகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+