கடைசி கட்டத்தில் பைக்கில் பதற விட்ட தினகரன்.. தலையில் ஹெல்மட் இல்லாமல்!!
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகரில் இன்று அனல் பறக்கப் பிரச்சாரம் செய்த டிடிவி தினகரன் முடிந்தவரை இன்று தனது முத்திரையை தொகுதி முழுவதும் ஆணித்தரமாக பதித்து விட்டார்.
பிரச்சாரம் செய்ய கடைசி நாளான இன்று அவர் பிரமாண்டக் கூட்டத்தைக் கூட்டி தொகுதியையே பதறடித்து விட்டார். அத்தோடு நில்லாமல் பைக்கிலும் பயணித்து தொகுதி மக்களிடம் தனது குக்கர் சின்னத்தை நீக்கமற மனதில் பதித்து விட்டார்.
திராவிடக் கட்சிகளுக்கு சற்றும் சளைக்காத வகையில் தினகரனின் பிரச்சாரம் இந்த, "பணக்கார" இடைத்தேர்தலில் காணப்பட்டது. தொடக்கம் முதல் முடிவு வரை தினகரன் குறித்த பேச்சுதான் அதிகம்.

செமத்தியான சின்னம்
தனக்கு கிடைத்த குக்கர் சின்னத்தை படு வேகமாக மக்களிடையே கொண்டு சென்று விட்டார் தினகரன். குக்கரை வைத்து எப்படியெல்லாம் பிரச்சாரம் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் செய்து அதகளப்படுத்தி விட்டது தினகரன் தரப்பு.

வீட்டுக்கு வீடு சப்ளையாம்
வீட்டுக்கு வீடு குக்கர் சப்ளைசெய்து விட்டது தினகரன் தரப்பு என்பது ஒரு புகாராகவே உலவுகிறது. ஆனாலும் தினகரன் தரப்பு அதைக் கண்டுகொள்ளவில்லை. தனது வேலையில் கண்ணாக இருந்தது.

கட்டக் கடைசியாக பைக்
இன்று கடைசிக் கட்டப் பிரச்சாரத்தின்போது வெற்றிவேல் பைக்கை ஓட்ட பின்னால் தினகரன் உட்கார்ந்து கொண்டு கடைசிக் கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது தொகுதியில் இன்னொரு பரபரப்பாக அமைந்தது.

யாருக்கு அழுத்தப் போகிறார்கள் பொத்தானை
என்னவெல்லாமோ செய்து பார்த்து விட்டார்கள். தினகரன் மட்டுமல்லாமல் அனைத்துக் கட்சியினருமே. பார்ப்போம்.. மக்கள் எந்தப் பக்கம் பொத்தானை அழுத்தப் போகிறார்கள் என்பதை!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications