என்னை பதவியில் இருந்து நீக்க தினகரன் யார்? - அதிமுக மாநில அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் சுளீர்
ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட பதவியிலிருந்து என்னை நீக்குவதற்கு தினகரன் யார் என்று அதிமுக மாநில அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல்லை: ஜெயலலிதாவால் ஒரங்கட்டப்பட்ட தினகரன் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட என் பதவியை பறிக்கும் உரிமை இல்லை என்று அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வர் எடிப்பாடி அணி, ஓபிஎஸ் அணி, தீபா அணி, தினகரன் அணி என பிரிந்தது. இந்நிலையில் டிடிவி தினகரனை ஓரம் கட்டுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்சை சமாதானப்படுத்தி அவரை துணை முதல்வர் பதவியில் அமர்த்தினார்.

தற்போது எடப்பாடி பழனிசாமி கை ஓங்கி வருவதால் தினகரன் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி கட்சியில் உள்ள பலரது பொறுப்புகளை தினகரன் பறித்து வருகிறார்.
அந்த வகையில் டிடிவி தினகரன் மீது போர்க்கொடி தூங்கிய அதிமுக மாநில அமைப்பு செயலாளர் சுதா பரமசிவனை அப் பதவியில் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து சுதா பரமசிவன் கூறுகையில், அதிமுக பொது செயலாளராக ஜெயலலிதா இருந்த போது என்னை 1998-ஆம் ஆண்டு பகுதி செயலாளர், பொது குழு உறுப்பினர், மாவட்ட செயலாளர், ஜெ. பேரவை செயலாளர் என பல்வேறு பொறுப்புகளில் ஜெயலலிதா என்னை நியமித்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு முன்பே என்னை அமைப்பு செயலாளர் ஆக்கினார். ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட என்னை தினகரன் அமைப்பு செயலாளர் பதவியில் நீக்குவதாக அறிவித்துள்ளார். ஜெயலலிதா இருக்கும் வரை தினகரன் கட்சிக்குள்ளேயே வரமுடியாமல் ஓரம் கட்டப்பட்டிருந்தார்.
இதில் இருந்தே தினகரனுக்கு என்னை நீக்கும் அதிகாரம் கிடையாது என்பது தெரிய வரும். இவ்வாறு அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications