பரபரப்பான அரசியல் சூழலில் தினகரன் பெங்களூர் பயணம்... சசிகலாவை சந்திக்கிறார்
சசிகலாவை நாளை பெங்களூர் சிறையில் தினகரன் சந்திக்க உள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் தினகரன் பெங்களூர் பயணம் செல்கிறார். பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது.

அத்துடன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் புதுவை விண்ட் ப்ளவர் ரிசார்ட்டில் முகாமிட்டுள்ளனர். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக சபாநாயகரிடம் நம்பிக்கை இல்லா தீர்மானம் தரவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் தினகரன் பெங்களூர் பயணம் செல்கிறார். பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து தினகரன் ஆலோசனை நடத்த உள்ளார்.












Click it and Unblock the Notifications